Homeசெய்திகள்ஆக்ஸிஜன் செறிவூட்டி: டி.வி.எஸ். நிறுவனம் வழங்கியது

ஆக்ஸிஜன் செறிவூட்டி: டி.வி.எஸ். நிறுவனம் வழங்கியது

ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய டி.வி.எஸ். நிறுவனம்

திருவண்ணாமலையில் கொரோனா சிகிச்சைக்காக டி.வி.எஸ். நிறுவனம் வழங்கிய 17 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

டி.வி.எஸ். நிறுவனம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக முகாம் அலுவலகத்தில் இன்று (16.05.2021) கொரோனா சிகிச்சைக்காக டி.வி.எஸ். நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட 17 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி பெற்றுக் கொண்டார். அப்போது¸ சுகாதாரப் பணிகளின் துணை இயக்குகநர்; அஜிதா¸ டாக்டர் ரமணன்¸ டி.வி.எஸ். நிறுவனத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

17 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மிதமான (ஆடைன) ஆக்ஸிஜன் செறிவு அளவு (90 முதல் – 94 வரை) உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான 17 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் டி.வி.எஸ். நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது. இதில்¸ 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் ஆரணி மற்றும் செய்யாறு அரசு மருத்தவமனைகளுக்கும்¸ 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கொரோனா பராமரிப்பு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

5 லிட்டர் கொள்ளளவு

மேலும்¸ மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புதியதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும் கொரோனா பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய டி.வி.எஸ். நிறுவனம்

மருந்துகள் பரிந்துரை 

இதனை தொடர்ந்து¸ மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் 24 மணி நேரம் செயல்பட்டு வரும் கோவிட்-19 கட்டுபாட்டு அறையில் மருத்துவர்கள் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் தொலைபேசி வாயிலாக ஆலோசனைகள் வழங்கப்படுவதையும்¸ மருந்துகள் பரிந்துரை செய்வதையும் மாவட்ட ஆட்சியர்  நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

தொலைபேசி எண்கள் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனா தொடர்பான சந்தேகங்கள்¸ மருத்துவமனைகள்¸ சிகிச்சை மையங்கள் குறித்த விவரங்கள் மற்றும் புகார்களுக்கு 04175-1077¸ 04175-233344¸ 04175-233345 ஆகிய எண்களிலும் மற்றும் 8870700800 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!