Homeசெய்திகள்கள்ளசாராயம் தாராளம்-அதிகாரிகளிடம் எ.வ.வேலு காட்டம்

கள்ளசாராயம் தாராளம்-அதிகாரிகளிடம் எ.வ.வேலு காட்டம்

கள்ளசாராயம் தாராளம்-அதிகாரிகளிடம் எ.வ.வேலு காட்டம்

திருவண்ணாமலை பகுதியில் கள்ளச்சாராயம் தாராளமாக கிடைப்பதாக எ.வ.வேலு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கொரோனா தொற்றால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பொதுப்பணித் துறை அமைச்சர் எ. வ. வேலு அமைச்சர் பொறுப்பேற்று 1 மாதத்திற்கு பிறகு முதன்முறையாக இன்று திருவண்ணாமலைக்கு வந்தார். தன்னை வரவேற்க கூட்டம் வரும் என்பதால் இதை தவிர்க்க அறிக்கை ஒன்றை வெளியிட்ட எ.வ.வேலு அதில் கொரோனா பெருந்தொற்று முற்றியிலும் குறையும் வரையும்¸ ஊரடங்கு முடியும். வரை சென்னை¸ திருவண்ணாமலையில் தன்னை நேரில் சந்திக்க வர வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தார். 

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (10.06.2021) திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித் துறை அமைச்சர் எ. வ. வேலு நடைபெற்றது. 

இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் ஒவ்வொருவரையும் விசாரித்த பிறகே உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர். 

ஆனாலும் எ.வ.வேலு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த போது அவருடன் வந்தவர்களால் அதிக அளவு கூட்டம் சேர்ந்தது. போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பிறகு எ.வ.வேலு மீட்டிங் ஹாலுக்கு சென்றார். அப்போது சமூக இடைவெளியை  பின்பற்றாமல்அவரை பின்தொடர்ந்து திமுகவினர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றனர். 

See also  பார்ட் டைம் ஜாப்-ரூ.6 லட்சத்தை ஏமாந்த "இந்தியன்"

பிறகு எ.வ.வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி¸ மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி¸ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை)¸ எம்.கே.விஷ்ணுபிரசாத் (ஆரணி)¸ சட்டன்ற உறுப்பினர்கள்  மு. பெ. கிரி (செங்கம்)¸ எஸ். ஆம்பேத்குமார் (வந்தவாசி)¸  பெ. சு. தி. சரவணன் (கலசபாக்கம்)¸ ஓ. ஜோதி (செய்யாறு)¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அ. பவன் குமார் ரெட்டி¸ மாவட்ட வன அலுவலர் அருண்லால்¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா¸ மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனிவாசன்¸ துணைத் தலைவர் பாரதி ராமஜெயம்¸ முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

கூட்;டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது¸

நான் கடந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது¸ கொரோனா முதல் அலையில் வேலை இல்லாமல் உணவுக்கு கஷ்டப்பட்டு இருந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக¸ நாங்கள் களத்தில் இறங்கி ஒரு மாதம் உணவு வழங்கினோம். ஆண்மீக நகரமான திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாமியார்கள் அதிகம் உள்ளனர். இவர்களின் பசியினை போக்குவதற்காக உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தி மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில்¸ மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுகாதாரத் துறை¸ உள்ளாட்சித் துறைகள்¸ வருவாய்த் துறை¸ காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அரசு உயர் அலுவலர்கள்¸ மருத்துவர்கள்¸ செவிலியர்கள்¸ மருத்துவப் பணியாளர்கள்¸ தூய்மைப் பணியாளர்கள்¸ காவலர்கள்¸ முன்களப் பணியாளர்கள்¸ ஆகியோர் இரவு¸ பகல் பாராமல் 24 மணி நேரமும் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்¸ அவர்களுக்கு எனது நன்றிகளையும்¸ பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது¸ குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

See also  ரயில்,பஸ்,விமானம் மூலம் சுற்றுலா சென்ற மாணவிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு  கொரோனா ஊரடங்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் மாலையில் நடைபெற்ற கானொலி காட்சியில் திருவண்ணாமலை மாவட்டம் உட்பட சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் பின்தங்கி உள்ளதாக¸ விரைவு படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்;. இதன்படி¸ மாவட்ட ஆட்சியர் இரவு 11.00 மணி அளவில் எண்ணிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். நான் உடனடியாக அனைத்து ஒன்றியக் குழுத் தலைவர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டும் அரசுடன் இணைந்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இரு தினங்களில் தடுப்பூசி வந்து விடும்¸ மாவட்டத்தில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் தடுப்பூசி செலுத்துவதில் முதல் மூன்று இடங்களில் வர வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் மூன்றாவது அலை வந்தல் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.

See also  மகளை சீரழித்தவரை வெட்டி சாய்த்த தந்தை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளடமிருந்து மட்டும் தான் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்¸ வியாபாரிகளிடமிருந்து பெறக்கூடாது¸ இதில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.; உழவர் சந்தைகளை விவசாயிகள் பயன்படுத்தும் விதமாக உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

திருவண்ணாமலை அடுத்த பாய்ச்சல் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அதிக அளவு சாராயம் காய்ச்சபடுவதாக புகார்கள் வந்திருக்கிறது.  இதை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மாவட்டத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும். ஏதாவது உயிரிழப்பு என்றால் நான்தான் பதில் சொல்ல வேண்டும். 

மணல் கடத்தல் தடுத்திட அனைத்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு அரசு அலுவலர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

கள்ளச்சாராயம் அதிகமாக உள்ளது என ஆளும் கட்சி அமைச்சரே குற்றஞ்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!