Homeஅரசு அறிவிப்புகள்கொரோனாவால் இறந்தால் ரூ.5 லட்சம் கடன்

கொரோனாவால் இறந்தால் ரூ.5 லட்சம் கடன்

கொரோனாவால் இறந்தால் ரூ.5 லட்சம் கடன்  

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின்  குடும்பத்துக்கு குறைந்த வட்டியில் ரூ.5 லட்சம்  கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா முதல் அலையும்¸ இரண்டாவது அலையும் பல உயிர்களை பலி கொண்டு விட்டன. இதனால் பலர்¸ குடும்பத் தலைவர்களை இழந்து செய்வதறியாது உள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டத்தை பெற விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸ 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர்-மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்பத்தில் வருமான ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்திருப்பின் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழகம் “SMILE” என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர்- மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமான ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60க்குள் இருக்க வேண்டும்.

See also  நாளை உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் -கலெக்டர் தகவல்
பா.முருகேஷ்

இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத் தொகை ரூ.5லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.4லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கொரோனா வைரஸால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!