திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் உள்ளிட்ட பணியிடங்கள் ரூ.12ஆயிரம் ஒப்பந்த ஊதியத்தில் நிரப்பப்பட உள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோவிட்-19 தொற்று தடுப்பு பணிக்கு மருத்துவம் சாரா பணியிடங்ககளான மருந்தாளுநர்¸ ஆய்வுக்கூட நுட்புநர் மற்றும் நுண்கதிர் வீச்சாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதற்கு பட்டாய படிப்பு இரண்டாண்டு முடித்தவர்களிடமிருந்து 6 மாதங்களுக்கு தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஊதிய விவரம் வருமாறு¸
மருந்தாளுநர் பணியிடத்திற்கு ரூ.12 ஆயிரமும்¸ ஆய்வுக்கூட நுட்புநர் பணியிடத்திற்கு ரூ.12 ஆயிரமும்¸ நுண்கதிர் வீச்சாளர் பணியிடத்திற்கு ரூ.12 ஆயிரமும் ஊதியம் வழங்கப்படும்.
தகுதிகள் வருமாறு¸
மருந்தாளுநருக்கு டிப்ளமோ இன் பார்மசியும்¸ (Diploma in Pharmacy)
ஆய்வுக்கூட நுட்புநருக்கு 2 ஆண்டுகள் டிப்ளமோ¸ அல்லது மருத்துவ ஆய்வக தொழில் நுட்பமும் படித்திருக்க வேண்டும். (2 Years Diploma (or)
Certificate in Medical Laboratory Technology Course) நுண்கதிர் வீச்சாளர் பணியிடத்திற்கு ரேடியோ நோயறிதல் தொழில்நுட்பத்தில் 2 வருட டிப்ளமோ படிப்பு (2 Years Diploma Course in Radio Diagnosis Technology)
மேற்கண்ட பணி நியமனங்கள் Walk–in Interview மூலமாக நிரப்பப்படும். எனவே¸ மருந்தாளுநர் பதவிக்கு 03.08.2021 அன்றும்¸ நுண்கதிர் வீச்சாளர் பதவிக்கு 04.08.2021 அன்றும் மற்றும் ஆய்வுக்கூட நுட்புநர் பதவிக்கு 05.08.2021 அன்றும் நேர்காணல் நடைபெறும்.
இந்த நேர்காணல் திருவண்ணாமலை தண்டராம்பட்டு ரோட்டில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் உரிய அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.