Homeசெய்திகள்மூட்டை¸ மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கல்

மூட்டை¸ மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கல்

மூட்டை¸ மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கல்

திருவண்ணாமலை அருகே குடோனிலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்மந்தமாக தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு¸ போதைப் பொருள் கடத்தலை கண்டுபிடிப்பது¸ ரவுடிக் கும்பல் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது மற்றும் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. பல நேரங்களில் உள்ளுர் போலீஸ் கண்டுபிடிக்காததை இவர்கள் கண்டு பிடித்து தருவார்கள். 

சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை சமுத்திரம் காலனியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பாக்கெட்டுகளை கண்டு பிடித்தனர். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலை பகுதியிலிருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி செல்லப்படுவதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு சென்னை காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் வேலூர் சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வம் அறிவுரையின் பேரில் திருவண்ணாமலை சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணராஜ்¸ சுரேஷ்பாபு ஆகியோர் திருவண்ணாமலை அடுத்த சாவல்பூண்டி கிராமத்தில் ஆட்டோ டிரைவர் செந்தில் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது அந்த வீட்டில் மூட்டை¸ மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வள்ளிவாகையைச் சேர்ந்த குமார்(வயது 55) என்பவர் அந்த வீட்டை ரேஷன் அரிசியை பதுக்க குடோனாக பயன்படுத்தியது தெரிய வந்தது. அங்கிருந்த 8.5 டன் கொண்ட நூற்றுக்கணக்கான ரேஷன் மூட்டைகளை கைப்பற்றி திருவண்ணாமலை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகாமதியிடம் ஒப்படைத்தனர். 

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வரும் குமார்¸ குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதை அதிக லாபத்திற்கு கர்நாடகா¸ ஆந்திரா ஆகிய மாநிலங்களில் விற்றதும் தெரிய வந்தது. குடோனிலிருந்து தப்பி ஓடிய குமாரை போலீசார் தேடி வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தலில் குமாரின் மைத்துனர் பிச்சாண்டிக்கும்¸ குமாருக்கு வீடு கொடுத்த ஆட்டோ டிரைவர் செந்திலுக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதே போல் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருவண்ணாமலை தேனிமலையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 டன் கொண்ட 500 மூட்டை ரேஷன் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

See also  திருவண்ணாமலையில் ரூ.20 கோடியில் புதிய மார்க்கெட்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!