Homeஆன்மீகம்தி.மலை கோயிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்

தி.மலை கோயிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருவண்ணாமலை கோயிலில் கொடியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 63 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். 

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை 6 மாதங்கள் சூரியன் தெற்கு நோக்கி நகரும். இதை தட்சிணாயன புண்ணிய காலம் என்பர். இது பகல் பொழுது அதிகம் கொண்டதாகும். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை 6 மாதங்கள் சூரியன் வடக்கு நோக்கி நகரும். இதை உத்தராயண புண்ணிய காலம் என்பர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்களும் விழாக்கள் நடைபெறும். இதில் முக்கிய விழா சூரியன் தென்திசை நோக்கி நகரும் காலமான ஆடி மாத பிறப்பை வரவேற்கும் ஆனி பிரமோற்சவ விழாவாகும். இந்த ஆனி பிரமோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும். 

அண்ணாமலையார் கோயிலில் தட்சிணாயன புண்ணிய காலம்¸ உத்தராயண புண்ணிய காலம்¸ திருக்கார்த்திகை தீபம் ஆகிய 3 திருவிழாக்களுக்கு அண்ணாமலையார் சந்நதியில் உள்ள தங்கக்கொடி மரத்திலும்¸ ஆடிப்பூரத்தில் உண்ணாமுலையம்மன் சந்நதியில் உள்ள தங்க கொடிமரத்திலும் கொடியேற்று விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி தட்சிணாயன  புண்ணிய கால கொடியேற்று விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து முதலில் விநாயகர்¸ பிறகு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருளினர். 

தி.மலை கோயிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்

காலை 6 மணிக்கு அண்ணாமலையார் சன்னதிக்கு முன்பு உள்ள 72 அடி உயர தங்க கொடி மரத்தில் மிதுன லக்கினத்தில் கோகுல்சேஷாத்திரி¸ பி.டி.ரமேஷ்¸ வெங்ட்ராஜன்¸ ராஜேஷ்¸ சண்முகம்¸ கீர்த்திவாசன் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இன்று துவங்கி 10 நாட்களும் சுவாமி¸அம்பாள், அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்புரிவர்.

10 ஆம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். இந்த ஆண்டு தட்சிணாயன புண்ணியகாலத்தில் ஆனி திருமஞ்சனமும் இணைந்து வருவது கூடுதல் சிறப்பாகும். கடந்த 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டுதான் இரண்டு உற்சவங்களும் இணைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. கொடியேற்று விழாவில் கொடியேற்ற விழாவில் அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஞானசேகர்¸ திமுக நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன்¸ வக்கீல் அருள்குமரன் உள்பட 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். 

சென்ற ஆண்டு இந்த தட்சிணாயின புண்ணிய கால கொடியேற்று விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வரலாற்றில் கொரோனா தொற்று வைரஸ் பரவல் காரணமாக முதன்முறையாக ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு எந்தவித தடங்கலுமின்றி கொடியேற்று விழா நடைபெற்றது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

See also  திருவண்ணாமலை:நவராத்திரி விழா-பக்தர்கள் ஏமாற்றம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!