Homeஆன்மீகம்திருவண்ணாமலை:கோயில்களில் தரிசனத்திற்கு தடை

திருவண்ணாமலை:கோயில்களில் தரிசனத்திற்கு தடை

திருவண்ணாமலை:கோயில்களில் தரிசனத்திற்கு தடை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு கொரோனா பரவலை தடுக்க 3 நாட்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையின் காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை பக்தர்களின்றி ஆடிப்பூரம் கொடியேற்றம் நடைபெறுகிறது. 

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸

தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள்¸ ஊர்வலங்கள் நடத்தக் கூடாது என்றும்¸ அன்றாடம் நடைபெறும் ஐதீக முறைப்படியான பூஜை புனஸ்காரங்கள் கோயில் அலுவலர்களால் மட்டும் நடத்திக் கொள்ளவும்¸ பொதுமக்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில் உட்பட அனைத்து கோயில்களுக்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்¸ பக்தர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் காரணமாக கொரோனா நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே¸ பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் திருக்கோயில்கள்¸ திருவண்ணாமலை அருள்மிகு அருணாசசேலசுவரர் திருக்கோயில்¸ படவேடு ரேணுகாம்பாள் திருக்கோயில் உட்பட அனைத்து பிராதான திருக்கோயில்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு 01.07.2021 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 03.08.2021 (செவ்வாய்க்கிழமை) வரை சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது. 

மேலும்¸ ஆகமவிதிப்படி சுவாமி அலங்காரங்கள்¸ பூஜை புனஸ்காரங்கள் அர்ச்சகர்கள்¸ திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் தெரிவித்துள்ளார். 

கிராம தெய்வங்களாக அய்யனார்¸ மாரி அம்மான்¸ முனீஸ்வரன்¸ மற்றும் மதுரை வீரன் போன்றவர்கள் விளங்குகின்றனர். அவர்களை விட தமிழர்கள் அதிகமாகப் போற்றி வணங்குவது தமிழ் கடவுளான முருகனைத்தான். தைபூசம்¸ கிருத்திகை¸ வைகாசி விசாகம்¸ பங்குனி உத்திரம்¸ போன்ற தினங்கள் முருகனுக்கு விசேஷமான தினமாகும். 

முக்கியமாக ஆடிக்கிருத்திகை யொட்டி விரதம் இருந்து முருகனை தரிசனம் செய்ய பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை செல்வார்கள். அலகு குத்தி¸ செக் இழுத்து நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். இதற்கெல்லாம் அரசு தடை விதித்திருப்பதால் முருக பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலும்  அறுபடைவீடு முருக பக்தர்கள் சார்பில் நடைபெறும் 1008 காவடி ஊர்வலம் ஆடிக்கிருத்திகையான நாளை மறுநாள்(02-08-2021) நடைபெறாது. அதே போல் சோமாசிபாடி பாலசுப்பிரமணியர் கோயிலும் மொட்டை அடித்தல்¸ காது குத்தல்¸ காவடி எடுப்பது போன்ற நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆடிப்பூரம் கொடியேற்றம் 

உலக மக்களை காப்பாற்ற அம்மாள்¸ சக்தியாக உருவெடுத்த நாள் ஆடிப்பூரமாகும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விமர்சையாக நடைபெறும். 

திருவண்ணாமலை:கோயில்களில் தரிசனத்திற்கு தடை

ஆடி பிரம்மோற்சவத்தை யொட்டி விநாயகர் உற்சவம் இன்று இரவு அண்ணாமலையார் கோயிலில் நடந்தது. இரண்டாம் பிரகாரத்தில் உள்ள உற்சவ மூர்த்தியான விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து விநாயகர் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்தார். 

பிறகு பிடாரி அம்மன் சன்னதி எதிரே உள்ள மரத்தின் கீழ் புற்று மண் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. சேகரிக்கப்படும் இந்த மண் 12 பாத்திரங்களில் கொட்டப்படும். அதில் நவதானியங்களை சேர்ப்பார்கள். 10 வது நாள் தீர்த்தவாரி அன்று குளக்கரையில் இதைக் கரைப்பார்கள். 

இந்நிலையில் அம்மன் சன்னதி எதிரே உள்ள 52 அடி உயர  தங்க கொடிமரத்தில்   நாளை காலை 6 மணியிலிருந்து 7-30 மணிக்குள் கிருத்திகை நட்சத்திரத்தில் கடக  லக்கினத்தில் ஆடி பிரம்மோற்சவ கொடியேற்றம் நடக்கிறது. 1ந் தேதி முதல் 3 நாட்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் நாளை நடைபெறும் கொடியேற்றம் பக்தர்களின்றி நடக்கிறது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!