Homeசெய்திகள்பயன்படுத்திய எண்ணெய்யை இனி விற்கலாம்

பயன்படுத்திய எண்ணெய்யை இனி விற்கலாம்

எண்ணெய் சேமிப்பு  கேன் வழங்கல்

கடைகளில் பயன்படுத்திய எண்ணெய்யை ரூ.26க்கு பெற்று அதிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டத்தை கலெக்டர் முருகேஷ் துவக்கி வைத்தார். 

திருவண்ணாமலை ராமகிருஷ்ணா ஓட்டலில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் இன்று (29.07.2021) பயன்படுத்திய சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் (Bio-Diesel) தயாரிக்கும் RUCO (REPURPOSE USED COOKING OIL)  திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மு. பிரதாப், உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் வணிகர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.

RUCO (Repurpose Used Cooking Oil)  சமையலுக்கு உபயோகப்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் வறுக்கும் போது மனித நுகர்வுக்கு 25 சதவீதத்திற்கு மேலாக உள்ள Total Polar Compounds (மொத்த துருவ கலவைகள்) பயன்படுத்தும் போது பாதுகாப்பற்றதாக மாறிவிடுகிறது. பலமுறை உபயோகப்படுத்திய எண்ணெய் பயன்படுத்தும்போது எண்ணெய்யில் உள்ள ஊட்டசத்து உள்ளிட்ட பண்புகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.  குறிப்பாக புற்று நோய்¸ இதய பாதிப்பு¸ நெஞ்சு எரிச்சல்¸ உயர் இரத்த அழுத்தம்¸ உடல் பருமன்¸ ஞாபகமறதி¸ கொழுப்பு மற்றும் கல்லீரல் சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்பட முக்கிய காரணமாகி விடுகிறது.

இதை தவிர்க்கும் பொருட்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை (fssai) மற்றும் பெட்ரோலியம் துறை இணைந்து உபயோகப்படுத்திய எண்ணெய்யினை பயோ டீசலாக (Bio-Diesel) மாற்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே நாடு முழுவதும் fssai-ல் அங்கிகரிக்கப்பட்ட 33 பயோ டீசல் தயாரிப்பாளர்கள் மற்றும் 19 அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பயன்படுத்திய எண்ணெய் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி¸ திருவண்ணாமலை மாவட்டத்தில் பயன்படுத்திய எண்ணெய் வாங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான தனலக்ஷ்மி கெமிக்கல் இண்டஸ்ட்ரி லிமிட்டெட் (DHANALAKSHMI CHEMICAL INDUSTRY LIMITED) நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய்க்கான செக் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 50 லிட்டர்களுக்கு மேல் பயன்படுத்தப்படும் அனைத்து உணவகங்கள்¸ இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் கடைகள் மற்றும் துரித உணவகங்கள் ஆகியவைகளில் பயன்படுத்திய சமையல் எண்ணெய்களை மறுமுறை உபயோகப்படுத்தாமல் மறுசுழற்சிக்கு¸ மாவட்டத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட உணவகங்கள்¸ இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் உரிமையாளர்கள் மூலமாக இன்று (29.07.2021) பயன்படுத்திய எண்ணெய் அளிக்கப்பட்டு¸ எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் மாவட்ட ஆட்சியரால் துவக்கி வைக்கப்பட்டது.

பயன்படுத்திய எண்ணெய் 1லிட்டர் ரூ.26க்கு வாங்கப்படுகிறது. இந்த எண்ணெய்யை சேமிக்க உணவகங்கள்¸ இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் உரிமையாளர்களுக்கு 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன் வழங்கப்பட்டது. 

விஷமாகும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் 

உபயோகித்த எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால்¸ அதன் தன்மை மாறி அதில் ட்ரான்ஸ் கொழுப்பின் அளவு அதிகமாகும். இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்வதின் மூலம் இருதயம் சம்பந்தமான நோய்கள் வருகின்றன. இதனால் ஒரு வருடத்தில்¸ இந்தியாவில் 60 ஆயிரம் இறப்புகளும்¸ உலக அளவில் 5 லட்சம் இறப்புகளும் ஏற்படுகின்றன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து உலக சுகாதார நிறுவனம்¸ இந்த ட்ரான்ஸ் கொழுப்பினை 2023 ஆண்டிற்குள் வெகுவாக கட்டுப்படுத்திட அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்தே பயன்படுத்திய எண்ணெய்யை விலைக்கு வாங்கும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!