Homeஅரசு அறிவிப்புகள்வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.200 லிருந்து ரூ.600 வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது¸ 

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதை பெறுவதற்கான தகுதிகள் வருமாறு¸ 
1) பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பள்ளியிறுதி வகுப்புத் தேர்ச்சி¸ மேல்நிலைக்கல்வி தேர்ச்சி, பட்டப்படிப்பு கல்வித்தகுதிகள் தேர்ச்சிப் பெற்று¸ வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ச்சியாக பதிவினை புதுப்பித்து வருபவர்கள்.
2) 30.06.2021-ம் தேதியின் நிலவரப்படி ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.  
3) மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும். 
4) ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும்¸ பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.  
5) குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.மாற்றுத்திறாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை.
6) ஒரு பதிவுதாரருக்கு ஒருமுறை மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும்.
10ஆம் வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.200-ம்¸ 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம்¸ மேல்நிலைக்கல்வி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.400-ம் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600-ம் வழங்கப்படுகிறது. 
மாற்றுத்திறனாளிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.600-ம்¸ மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ750-ம்¸ பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000-ம் உதவித் தொகை வழங்கப்படும்.  
மேற்குறிப்பிட்ட தகுதிகள் உள்ளவர்கள் திருவண்ணாமலை¸ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது www.tnvelaivaaippu.gov.in  என்ற வேலைவாய்ப்புத்துறை இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை
பா.முருகேஷ்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றும்¸ தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம்¸ ஆதார் அட்டை மற்றும் அனைத்து கல்விச்சான்றுகள் அசல் மற்றும் நகல்களுடன் மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகத்தில் 31.08.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!