Homeசெய்திகள்கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

உயர் மின் கோபுரம் அமைத்தற்கான நஷ்ட ஈடு கேட்டு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குடியேறும் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சட்டீஸ்கர் மாநிலத்திற்கு தமிழகத்திலிருந்து மின் வழித்தடம் செல்வதற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கோபுரங்கள் பெரும்பாலும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலத்தில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தைக்கு தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள்¸ பவர்கிரிட் நிறுவனம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலங்களில் கிணற்றுக்கு தனி இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கான ஏற்பாடுகளை ஏதும் பவர்கிரிட் நிறுவனம் செய்யவில்லை என சொல்லப்படுகிறது. 

See also  திருவண்ணாமலை:காதல் தகராறில் வாலிபர் கொலை?

இந்நிலையில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பவர்கிரிட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. ஏ.டி.எஸ்.பி மற்றும் டி.எஸ்.பிக்கள் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். விவசாயிகளை கைது செய்யவும் போலீஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. 

கலெக்டர் அலுவலகத்தின் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் விவசாயிகள் உள்ளே நுழைய முடியவில்லை. இதனால் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு தொகை வழங்க வேண்டும்¸ கிணற்றுக்கு ஒரு மீட்டருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்¸ உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு சாலையோரங்களில் கேபிள் மூலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். 

இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்¸ விவசாயிகளிடம் 2 முறை பேச்சு வார்த்தையை நடத்தினார். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்தனர். பிறகு மாலை 6 மணியளவில் அவர்களுடன் 3 வது முறையாக மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் பேச்சு வார்த்தை நடத்தினார். 

See also  கஜா புயலில் இனித்த பணி¸ இப்போது கசக்கிறதா? அமைச்சர் மீது மின் ஊழியர்கள் கடுப்பு

அப்போது விவசாயிகள்¸ கிணறு¸ போர்வெல் மற்றும் அனைத்து வகையான மரங்களுக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு வழங்கப்படும் என்ற உறுதிமொழியை பவர்கிரிட் நிறுவனம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஒவ்வொரு பகுதியிலும் எந்த அளவிற்கு அதிகப்பட்ச நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதோ அதே நஷ்ட ஈட்டை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த உறுதிமொழியை கடிதமாக தர விவசாயிகள் கேட்டனர். நாளை உறுதிமொழி கடிதம் தரப்படும் என சொல்லப்பட்டதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!