குரூப் 2¸-2A¸ குரூப் 4க்கு அரசு சார்பில் இலவச பயிற்சி 1ந் தேதி முதல் நேரடி வகுப்புகளாக நடைபெறும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
TNPSC தேர்வுக்கு தேர்வாளர்கள் தயாராகும் விதம் அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் இந்த பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 1ந் தேதி முதல் நேரடி வகுப்புகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 2(அதிகாரி அந்தஸ்திலான பதவிகள்)¸ குரூப் 2A (பர்சனல் கிளார்க்¸ டிவிஷன் கிளார்க்)¸ குரூப் 4(வி.ஏ.ஓ.¸ ஜூனியர் அசிஸ்டென்ட்) போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது¸
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கவுள்ள தொகுதி 2¸ 2A மற்றும் 4–ல் (Group-II, IIA & IV) அடங்கிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 01.09.2021 அன்று முதல் நடைபெற உள்ளது.
இப்பயிற்சி வகுப்பு வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நேரடி வகுப்புகள் காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும் இணையவழி வகுப்புகள் மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு பாடபிரிவிற்கும் தனித்தனி ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதுடன் ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.
கடந்த ஓராண்டு காலமாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் காரணமாக Online மூலம் மட்டுமே நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்புகள் 01.09.2021 முதல் நேரடி வகுப்புகளாகவும் நடைபெறவுள்ளது.
இப்போட்டித் தேர்விற்கு தயாராகும் விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.09.2021 அன்று நேரடியாக இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இணையவழி வகுப்பில் கலந்து கொள்ள விருப்புபவர்கள் 04175-233381 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயர் மற்றும் Whatsapp எண்ணை தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.