Homeஅரசு அறிவிப்புகள்பி.சி(B.C),எம்.பி.சி(M.B.C) மேம்பாட்டுக்கு கடன்

பி.சி(B.C),எம்.பி.சி(M.B.C) மேம்பாட்டுக்கு கடன்

பிற்பட்டோர் மேம்பாட்டுக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் சிறப்பு கடன் வழங்கும் முகாமில் கல்வி¸ சிறு தொழில் கடன்¸ ஆட்டோ வாங்க விண்ணப்பிக்கலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 இடங்களில் மட்டுமே நடைபெறும் சிறப்பு முகாமை மற்ற தாலுக்காக்களிலும் நடத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸ 

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம்¸ சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம்¸ கல்விக்கடன் திட்டம்¸ கறவை மாடு கடனுதவி¸ ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. 

திருவண்ணாமலை  மாவட்டத்தில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்டோர்¸ மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பயன்பெறும் வகையில் 11.08.2021 அன்று காலை 11.00 மணியளவில்  செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திலும்¸ 12.08.2021 அன்று காலை 11.00 மணியளவில் கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 

எனவே¸ திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தபட்டோர்¸ மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்கள்¸  மேற்படி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடன் மனுக்களுடன் ஆதார் அட்டை¸ வருமான சான்று¸ உணவு பங்கீடு அட்டை (ரேசன் கார்டு) அல்லது இருப்பிடச்சான்று¸ கடன் பெறும் தொழில் குறித்த விவரம்¸ திட்ட அறிக்கை¸ ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ்¸ உண்மைச் சான்றிதழ் (Bonafide certificate) கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது அல்லது செலான் (Original) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். 

இச்சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு அனைத்து பிற்படுத்தபட்டோர்¸ மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மக்களும் கலந்துகொண்டு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவி பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் நீண்ட தூரத்தில் இருப்பவர்கள் இந்த முகாமில் வந்து கலந்து கொள்வது என்பது சிரமமாக இருக்கும் என்பதால் மற்ற தாலுக்காக்களிலும் சிறப்பு கடன் வழங்கும் முகாமை நடத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

See also  திருவண்ணாமலை: ஆம்புலன்ஸ் கட்டணம் நிர்ணயம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!