Homeஆன்மீகம்திருவண்ணாமலை கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு

திருவண்ணாமலை கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு

திருவண்ணாமலை கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. கை நிறைய வளையல்களுடன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். 

பெண்களின் சக்திக்கு பெருமை சேர்க்கிற மாதமாகவும்¸ சிவனின் சக்தியை விட அம்மனின் சக்தி நிறைந்த மாதமாகவும் ஆடி மாதம் விளங்குகிறது. ஆடி செவ்வாய்¸ ஆடி வெள்ளி¸ ஆடி கிருத்திகை¸ ஆடி அமாவாசை¸ ஆடி பவுர்ணமி¸ கருட ஜெயந்தி என விசேஷங்கள் நிறைந்த இந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படும். 

வரலாற்று சிறப்பு மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர விழா கடந்த 1ந் தேதி உண்ணாமலையம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலையும் மாலையும் பராசக்தி அம்மன் திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் உலா வந்தார். 

திருவண்ணாமலை கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு

நிறைவு நாளான இன்று (10-08-2021) தீர்த்தவாரி(சுவாமிக்கு நடைபெறும் நீராட்டு உற்சவம்)¸ மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தக் குளத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருள சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி நடைபெற்றது.

மாலையில் பெரிய நந்திக்கு அருகில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு விழா நடந்தது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்றும்(10ந் தேதி)¸ நாளையும்(11ந் தேதி) பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சிவாச்சாரியார்கள்¸ கோயில் அலுவலர்கள்¸ பணியாளர்கள்¸ பிச்சக மிராசுதாரர்கள் மட்டுமே ஆடிப்பூர விழாவில் கலந்து கொண்டனர். 

திருவண்ணாமலை கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு

அம்மனுக்கு கைநிறைய வளையல்கள் அணிவிக்கப்பட்டும்¸ சுவாமியின் பாத்தில் வளையல் மாலை வைக்கப்பட்டும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து 5ம் பிரகாரத்தில் அம்மன் வலம் வந்தார். இரவு அம்மனுக்கு நைவேத்தியமாக மூலிகை மருந்து நெய்வேத்தியம் படைக்கப்பட்டது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அம்மனுக்காக ஏற்றப்படும் கொடி¸ விழா நிறைவை குறிக்கும் வண்ணம் இறக்கப்பட்டது. 

ஆடிப்பூரத்தன்று குழந்தை பாக்கியம் கிடைக்கவும்¸ திருமணம் கைகூடவும்¸ சுக பிரசவம் நடக்கவும்¸ தாலி பாக்கியம் நிலைக்கவும் ஏராளமான பெண்கள் அம்பாளிடம் வளையல்களை வைத்து பூஜித்து அதை பெற்று செல்வர். ஆனால் கடந்த வருடமும்¸ இந்த வருடமும் அரசு விதித்த தடையினால் ஆடிப்பூர விழாவில் கலந்து கொண்டு அம்மனுக்கு சாத்தப்பட்ட வளையல்களை பெற்றுச் செல்ல  முடியாமல் பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

வழக்கமாக 10வது நாள் நள்ளிரவு சிவன் கோயில்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மட்டுமே நடத்தப்படும் தீ மிதி விழா அரசு விதித்த தடையின் காரணமாக இன்று  நடைபெறவில்லை.

————————————————————————————————————————————–

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்கள் விவரம் கோயில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. 

அண்ணாமலையார் கோயிலில் தமிழில் அர்ச்சனை
See also  தண்டபாணி ஆசிரமத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!