தமிழ் நாடு வணிகர் நல வாரியத்தில் சேர உறுப்பினர் சேர்க்கை கட்டணத்திலிருந்து 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கட்டணத் தொகை 500 ரூபாயை மூன்று மாதங்களுக்கு கட்டத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகர் நலவாரியத்தில் சிறு¸ குறு வணிகர்களுக்கான கட்டணமின்றி ஆயட்கால உறுப்பினர் சேர்க்கையினை ஊக்கப்படுத்தும் விதமாக நகராட்சி¸ பேரூராட்சி¸ உள்ளாட்சி மற்றும் வணிக வரித்துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் இன்று (19.08.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் திருவண்ணாமலை துணை ஆணையர் (மாநில வரி) முகமது அர்சத்¸ உதவி இயக்குநர்கள்¸ நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பேசியதாவது¸
இந்தியாவிலேயே முதன் முதலாகத் தமிழ் நாட்டில்தான் வணிகப் பெருமக்களின் நலனுக்காக “தமிழ் நாடு வணிகர் நல வாரியம்” என்ற அமைப்பு 25.09.1989 நாளிலிருந்து சீரிய முறையில் இயங்கி வருகிறது.
இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேர¸ சேர்க்கைக் கட்டணத் தொகையான 500 ரூபாயை வசூலிப்பதிலிருந்து மூன்று மாதங்களுக்கு விலக்களித்து ஆணையிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு¸ 15.07.2021 முதல் 14.10.2021 வரையிலான காலத்திற்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யும் அனைத்து புதிய சிறு மற்றும் குறு வணிகர்களுக்கான சேர்க்கை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக எந்த ஒரு வணிக நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது பங்குதாரர்¸ உறுப்பினர் ஆவதற்கு GST பதிவெண் அவசியமில்லை¸ வணிக உரிமம் (Trade Licence) இருந்தால் போதுமானது. வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் ஆவதற்கு http://www.tn.gov.in/tntwb/ என்ற இணையத்தில் விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு உதவி திருவண்ணாமலை உதவி ஆணையர் (மாநிலவரி) – 04175–298381¸ 04175-298382 9790452385¸ 9443228655¸ ஆரணி மாநிலவரி அலுவலர் – 04173-226820¸ 9442390590¸ போளுர் மாநில வரி அலுவலர் – 01481-222080¸ 9487348768¸ வந்தவாசி மாநில வரி அலுவலர் – 01483-225013¸ 8825876329 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்தார்.