Homeஅரசு அறிவிப்புகள்நெல் கொள்முதல் நிலையங்கள் மீண்டும் திறப்பு

நெல் கொள்முதல் நிலையங்கள் மீண்டும் திறப்பு

நெல் கொள்முதல் நிலையங்கள் மீண்டும் திறப்பு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. 

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது¸

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு நெல்விளைச்சல் அதிகளவில் இருந்ததால் அறுவடை களைகட்டியுள்ளது. இதனால் வெளிமார்க்கெட்டில் நெல்கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்தது. இருப்பினும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஒரு குவிண்டால் ரூ.1958க்கு பெறப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 

மாவட்டத்தில் இந்த ஆண்டு 71 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டுவந்தது. அறுவடை காலம் முடிந்ததால் இவை அனைத்தும் கடந்த வாரம் மூடப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான விவசாயிகளிடம் கையிருப்பு நெல்மூட்டைகள் இருப்பதாகவும் அவற்றை கொள்முதல் செய்ய மீண்டும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமெனவும் விவசாய பிரநிநிதிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு  14-08-2021 சனிக்கிழமை முதல் மாவட்டத்தில் 25 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே நெல் கொள்முதல் நிலையங்களில் 13-08-2021 முதல் முன்பதிவு செய்யவும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் நாளை முதல் அணுக்குமலை, கொளத்தூர், குண்ணத்தூர்,மண்டகொளத்தூர்,வண்ணாங்குளம், தச்சூர் மாமண்டூர், எலத்தூர், வல்லம், மருதாடு, கொவளை, நல்லூர், நெடுங்குணம்,  நம்பேடு, மேல்சீசமங்கலம், பாராசூர், தவசிமேடு, நாவல்பாக்கம்,  புலிரம்பாக்கம், ஆக்கூர், நாட்டேரி, அரியூர், தூசி, வெம்பாக்கம், பெருங்கட்டூர் ஆகிய 25 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் இயங்கவுள்ளது. 

நடப்பு சொர்னாவாரி பருவத்தில் 24,500 ஹெக்டேர் பரப்பளவில் நெல்சாகுபடி நடந்துள்ளது. தற்போது 1.47 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் ஆகும் என எதிர்பார்க்கப்படுவதாலும் நெல்விளைச்சல் அதிகமுள்ள பகுதியில் மட்டும் தற்போது மீண்டும் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படுகிறது. நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தவிர்க்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விற்பனைக்கு நெல் கொண்டுவரும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, சாகுபடி அளவிற்கு வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் அனுமதி படிவம் பெற்ற விவசாயிகளின் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.

விவசாயிகள் அல்லாத வெளிநபர்கள் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு வராமல் தடுக்க கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை கொண்டுவரும் விவசாயிகள் நீண்டநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், நெல் மூட்டைகளை மழையில் நனைவதை தவிர்க்கவும் தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் தொடர்புக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளரை 9487262555 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

See also  திருவண்ணாமலை மலை ஏற நிபந்தனைகள் வெளியீடு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!