Homeஅரசு அறிவிப்புகள்பி.சி.¸எம்.பி.சி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

பி.சி.¸எம்.பி.சி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

பி.சி.¸எம்.பி.சி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

பி.சி.¸ எம்.பி.சி மாணவர்களுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸

அரசு¸ அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட¸ மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட¸ மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவியருக்கு  இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பி.சி.¸எம்.பி.சி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

முதுகலை¸ பாலிடெக்னிக்¸ தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2¸00¸000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ-மாணவியர்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் இனங்கள் – 30.09.2021-க்குள்ளும்¸ புதியது இனங்களுக்கு   05.11.2021-க்குள்ளும் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.  மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship portal) புதுப்பித்தலுக்கு 15.10.2021 முதல் செயல்பட துவங்கும். புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள் 14.11.2021-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  அதே போல் புதிய இனங்களுக்கு (Fresh) இணையதளம் 16.11.2021 முதல் செயல்படத் துவங்கும்.  புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 31.12.2021-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். www.tn.gov.in/bcmbcdept என்ற அரசு இணையதளத்தில் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது.      

மேலும்¸ விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் 

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். 

See also  திருவண்ணாமலை:பிப்.10 முதல் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!