Homeஅரசு அறிவிப்புகள்கூட்டுறவு துறையில் வேலையில் சேர விருப்பமா?

கூட்டுறவு துறையில் வேலையில் சேர விருப்பமா?

கூட்டுறவு துறையில் வேலையில் சேர விருப்பமா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள்¸ கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்புக்கான பயிற்சியில் சேர்வதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது¸

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கங்கள்¸ கூட்டுறவு வங்கிகளில் வேலை வாய்ப்புக்கு முக்கிய கல்வித்தகுதியான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி (Diploma in Co-operative Management) வகுப்புக்கான சேர்க்கை விண்ணப்பம் 16.08.2021 முதல் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15.09.2021 அன்று மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

மாணவ- மாணவிகள் கேர்க்கைக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 

மேல்நிலைப்பள்ளி (+2) (10,+2 முறையில்) தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் +2 தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

பயிற்சியில் சேருவதற்கு 01.07.2021 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பினர்¸ தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் மற்றும் பழங்குடியினருக்குரிய இடங்கள் ஒதுக்கப்படும்.

9 மாத காலத்தில் 3 சான்றிதழ்கள் :

9 மாத காலம் நடைபெறயிருக்கும் இப்பயிற்சியின் முடிவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யக்கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டய சான்றிதழ்¸MS-Office கணினி பயிற்சி சான்றிதழ் மற்றும் நகை மதிப்பீடு சான்றிதழ் ஆகிய மூன்று சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பயிற்சிக் கட்டணம் :

இப்பயிற்சியில் சேர பயிற்சிக்கட்டணம் ரூ.14¸850.00 ஆகும். வகுப்பில் சேரும்போது ரூ.13¸350.00ம். பின்னர் மூன்று மாதத்திற்கு பிறகு மீதி ரூ.1¸500ஐ செலுத்த வேண்டும்.

இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம்¸ 204¸ திண்டிவனம் சாலை¸ திருவண்ணாமலை¸ தொலைபேசி எண். 04175 – 254793 என்ற முகவரிக்கு கூரியர் அல்லது பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என தெரிவித்துகொள்ளப்படுகிறது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!