நாகதோஷ பாதிப்புகளை நீங்கச் செய்யும் கருட பஞ்சமி மகா யாகம் திருவண்ணாமலை குலால்பாடி நாகராஜர் சித்தர் பீடத்தில் 13ந் தேதி நடக்கிறது.
நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி திருமணம் ஆகாதவர்கள்¸ குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்¸ நோயினால் அவதிப்படுபவர்களும் இந்த யாகத்தில் பங்கேற்கலாம்.
ராகு-கேது தோஷம் இருப்பதனால் வாழ்க்கையின் மிக முக்கியமானதான திருமணம்¸ குழந்தை பேறு தள்ளி போகும். இதனால்தான் திருமணம் கைகூட ஸ்ரீ காளஹஸ்தி சென்று தோஷம் கழித்து வருவார்கள். இதே போல் தமிழ்நாட்டிலும் திருநாகேஸ்வரம் போன்ற சில தலங்கள் ராகு-கேது பரிகார தலங்களாக விளங்குகின்றன.
ராகு-கேது தோஷம்¸ சர்ப்ப தோஷங்கள் நீங்க பல வழிபாட்டு முறைகள் இருந்தாலும்¸ கருட பஞ்சமி நாள் விசேஷ பலன்களை அளிக்கவல்லதாகும். அன்றைய தினம் செய்யும் வழிபாடுகள் நம்மை தொடாந்து கொண்டிருக்கும் நாக தோஷத்தை நீங்கச் செய்யும். இதனால்தான் கோயில்கள்¸ அரச மரத்தடியில் உள்ள நாகர் விக்கிரங்களுக்கு மஞ்சள் தடவி¸ பாலால் அபிஷேகம் செய்து வணங்குவதை பொது மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
வருகிற 13-08-2021அன்று விசேஷமிக்க கருட பஞ்சமி தினமாகும். இதையொட்டி திருவண்ணாமலையிலிருந்து காஞ்சி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள பெரியகுளம் குலால்பாடி சக்தி நகர்¸ காட்டுவழி நாகக்குட்டையில் அமைந்திருக்கும் ஸ்ரீ நாகராஜர் சித்தர் பீடத்தில் சிறப்பு யாகம் நடக்கிறது.
இது குறித்து அந்த பீடத்தின் நிறுவனர் ஏ.பி.ரமேஷ் கூறியதாவது¸
கால சர்ப்ப தோஷம் என்பது பரம்பரை¸ பரம்பரையாக தொடர்ந்து கொண்டிருக்கும். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் கருடபஞ்சமி வழிபாடாகும்.
ஜாதக ரீதியாக ராகு¸ கேது பகவான் லக்கினத்திலோ 2.5.7.8-ஆம் இடத்திலோ இருந்தால் கடும் நாக தோஷத்தை உண்டு பண்ணுவார்கள். இதில் இருந்து விடுதலை பெற கருட பஞ்சமி நாளன்று வேண்டி வணங்க தோஷம் நீங்கப்பெறும்.
சூரியன்,சந்திரன் இவர்களுடன் ராகு¸ கேது பகவான் இணைவு பெற்றால் அது கிரகண தோஷம் எனப்படும். இந்த தோஷம் நீங்க கருட பஞ்சமி வேண்டுதல் பயன்தரும். அன்றைய தினத்தில் ஒரு தட்டில் வாழை இலை வைத்து அதன்மீது பச்சரிசி பரப்பி மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுதல் சிறப்பாகும். மேலும் புற்றுக்கு பாலூட்டுதல் மிகுந்த சிறப்பினை தரும்.
இந்த கருட பஞ்சமி நாளன்று யார் ஒருவர் பக்தி சிரத்தையுடன் விரதம் இருந்து வணங்குகிறார்களோ அவர்களின் ஏழேழு ஜென்மத்து பாவங்கள் விலகுவதுடன் கர்ம வினைகளும் தீரும் என விஷ்ணு மகாத்மியம் கூறுகிறது. ராகு தசை நடப்பவர்களுக்கு புண்ணியத்தின் அடிப்படையில் திடீர் ராஜயோகம் உண்டாகும். கேது தசை நடப்பவர்களுக்கு பாவத்தின் அடிப்படையில் தீராத கஷ்டங்களும் உண்டாகும்.
நவகிரகங்களில் ராகுவும்¸ கேதுவும் சர்ப்ப கிரகங்கள். சர்ப்ப தோஷம்¸ நாகதோஷம்¸ காலசர்ப்ப தோஷம்¸ முதலான தோஷங்கள் ராகு கேதுவால் ஏற்படுகின்றன மேலும் தீங்கிழைக்காத சர்ப்பத்தினை அடித்தாலும் அதுவும் தோஷமாக மாறுகின்றது அதன் காரணமாக திருமணம் முதலான சந்நிதி தடைகள் ஏற்படும். காரியத்தடைகள் இருந்து கொண்டே இருக்கும். எதை தொட்டாலும் நஷ்டம்¸ தோல்வி¸ அவமானம் என சந்திக்கும்படியான சூழல்கள் இருக்கும். திருமணம் தள்ளி போய்க் கொண்டே இருக்கும். எந்த வேலையிலும் நீடிக்காமல் வேலை விட்டு வேலை என்று மாறிக்கொண்டே இருக்கும் சூழல் உருவாகும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் குடும்பத்தில் குழப்பங்கள் என நிம்மதியைக் குலைக்க வல்லது சர்ப்பதோஷமாகும்.
கருட பஞ்சமி அன்று நடத்தப்படும் பூஜைகளால் இதற்கெல்லாம் தீர்வு உண்டாகும். ஸ்ரீ நாகராஜர் சித்தர் பீடத்தில் 13.08.2021 வெள்ளிக்கிழமை அன்று கருட பஞ்சமியை முன்னிட்டு காலை 9.00 மணிக்குமேல் 12.00 மணிக்குள் நாக தோஷ நிவர்த்தி ஹோமம் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்வதன் மூலம் சர்ப்ப தோஷம், நாக தோஷம் மற்றும் நவ கிரகங்களால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கப்பெறும். திருமணம் ஆகாதவர்கள்¸ குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்¸ நோயினால் அவதிப்படுபவர்கள் வேண்டி வணங்க கருட பகவான் அருளால் நிவர்த்தி அடைவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு¸
V.பால்ராஜ்¸ திருவண்ணாமலை¸
A.P.இரமேஷ்¸ M.A., M.Phil.
செல்:9894308242
செல்:9443322489
– எஸ்.அருணாச்சலம்¸ ஆன்மீக செய்தியாளர்.