Homeசெய்திகள்ஒற்றுமையாக இருப்போம்- திமுக¸ அதிமுக முடிவு

ஒற்றுமையாக இருப்போம்- திமுக¸ அதிமுக முடிவு

ஒற்றுமையாக இருப்போம்- திமுக¸ அதிமுக முடிவு

ஊராட்சி மன்றங்களை கலைக்க விடக்கூடாது என்பதில் ஒற்றுமையாக இருப்பது என தி.மு.க¸ அ.தி.மு.க தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர். 

திருவண்ணாமலை துர்க்கையம்மன் கோயில் தெருவில் உள்ள லோட்டஸ் மகாலில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட  கலந்தாய்வு கூட்டம் மாநில தலைவர் அரசை எஸ்.எம்.முனியாண்டி தலைமையில் இன்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரணி அ.ராஜன்¸ மாவட்ட அவைத் தலைவர் கவிதா ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகிக்க¸ மாவட்ட செயலாளர் எம்.மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க¸ அ.தி.மு.க¸ பா.ம.கவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய பல தலைவர்கள் அரசு அதிகாரிகள் ஓவ்வொரு வேலைக்கும் லஞ்சம் கேட்பதாக தெரிவித்தனர். ஒரு தலைவர் பேசும் போது ஒரு பில் போட வட்டிக்கு வாங்கி ஒன்றரை லட்ச ரூபாயை அதிகாரிக்கு லஞ்சமாக கொடுத்துள்ளதாகவும்¸ இன்னும் ரூ18 ஆயிரம் அந்த அதிகாரி கேட்டு வருவதாகவும் தெரிவித்தார். போளுர் ஒன்றியத்தைச் சேர்ந்த கூட்டமைப்பின் தலைவர் பி.கணேசன்(அ.தி.மு.க) பேசுகையில்¸ அதிமுக ஆட்சியில் போளுர் ஒன்றியத்தில் அதிகாரிகளை கண்டித்து போராட்டங்களை நடத்தினோம். தற்போது ஆட்சி மாறினாலும்¸ காட்சிகள் மாறவில்லை¸ ஊராட்சி மன்றத் தலைவர்களை நசுக்க பார்க்கின்றனர் என குற்றம் சாட்டினார். 

இதையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களை கலைக்க விடக்கூடாது என்பதில் ஒற்றுமையாக இருப்பது எனவும்¸ ஊராட்சி மன்றங்களை கலைக்க வேண்டும் என சொல்பவர்களுக்க எதிராக கண்டன அறிக்கையை வெளியிடுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. 

தற்போதுள்ள ஊராட்சி அமைப்புகளை கலைக்கமாட்டோம் என்று நம்பிக்கை தெரிவித்ததற்கும்¸  எஞ்சியுள்ள 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தமைக்கு முதலமைச்சருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பது¸ ஊரக வளர்ச்சி துறையில் மாவட்டந்தோறும் ஊராட்சி தலைவர்களுக்கென ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கவேண்டும்¸ ஊராட்சி செயலாளர்களை 3 ஆண்டுக்கொருமுறை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்¸ 2011ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படை தற்போது ஊராட்சி நிதிகள் வழங்கப்படுவதை மாற்றி 2020 மக்கள் தொகை அடிப்படையில் நிதிகள் வழங்கிட வேண்டும்¸ 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் வரும் அனைத்து ஊராட்சி பணிகளை மேற்கொள்வதில் உள்ளுர் சேர்மன்¸கவுன்சிலர்கள் மற்றும் அரசியல் தலையீடுகளை தவிர்த்து தலைவர்கள் சுதந்திரமாக பஞ்சாயத்து ராஜ் சட்டம் வழிகாட்டு நெறிமுறைகள் படி நிர்வாகத்தை நடத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்¸ ஆடு மாடு கொட்டகை வழங்கும் முறையில் உள்ள முறைகேடுகளை கலையவேண்டும் ஊராட்சி தலைவர்களின் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தராமல் நிர்வாகத்தை சீர்குலைக்கும் ஊராட்சி துணைத் தலைவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்¸ ஆகஸ்டு 15 சுதந்தின தினத்தன்று தடையேதுமின்றி கிராம சபை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கௌரி காசிநாதன்¸ மாவட்ட துணைத் தலைவர் திவ்யா கோபி¸ டி.மோகன் மாவட்ட துணை செயலாளர்கள் வி.முரளிதரன்¸ துர்கா தேவி வெங்கடேசன்¸ ஊராட்சி மன்ற தலைவர்கள் வயலூர் சதாசிவம் டி.மாசிலாமணி உள்பட பலர் பங்கேற்றனர். 

முடிவில் மாவட்ட பொருளாளர் என்.கருணாநிதி நன்றி கூறினார்.

ஒற்றுமையாக இருப்போம்- திமுக¸ அதிமுக முடிவு

கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் அரசை எஸ்.எம்.முனியாண்டி செய்தியாளர்களிடம் கூறுகையில்¸ ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அரசியல்வாதிகள்¸ ஏ.டி.பஞ்சாயத்து¸ பி.டி.ஓ.போன்ற துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். தீர்மானங்களை தன்னிச்சையாக நிறைவேற்ற விடுவதில்லை. நிதிகளை முறையாக வழங்குவதில்லை. இதனால் பொதுமக்களின் அத்தியாவசிய¸ அவசிய பணிகள் பாதிக்கும். 

மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தேர்வு பெற்ற ஊராட்சிகளை கலைக்க வேண்டும் என அவசியமில்லை. ஆனால் ஒட்டு மொத்தமாக ஊராட்சிகளை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சருக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார். 

See also  திருவண்ணாமலை திருநங்கைக்கு ஆயுள் தண்டனை

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!