Homeசெய்திகள்சாமியார்¸ பா.ஜ.க செயலாளர்¸ ஓட்டல் அதிபர் கைது

சாமியார்¸ பா.ஜ.க செயலாளர்¸ ஓட்டல் அதிபர் கைது

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வலம்புரி சங்கை ரூ.2 கோடிக்கு பேரம் பேசிய சாமியார்¸ பா.ஜ.க செயலாளர்¸ ஓட்டல் அதிபர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். 

திருவண்ணாமலையில் நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையாரே மலை வடிவில் காட்சி அளித்து வருகிறார். கிரிவலப்பாதையில் சித்தர்களும்¸ ஞானிகளும்¸ ரிஷிகளும்¸ முனிவர்களும் மலையை சுற்றிலும் தவம் செய்து கொண்டு கர்ம வினைகள்¸ கஷ்டங்கள்¸ துன்பங்கள் நீக்கி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருவதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதனால் பவுணர்மி மற்றும தீப திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை வலம் வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கிரிவலப்பாதையில் போலி ஆசிரமங்களும்¸ போலி சாமியார்களும் பெருகி புனிதத்தை கெடுத்து வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதை நிரூபிக்கும் வகையில் நேற்று நடைபெற்ற சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நித்யானந்தா ஆசிரமம் எதிரில் உள்ள சாலையில் சாய்பாபா ஆசிரமம் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு சிலர் ஒன்று கூடி வலம்புரி சங்கை ரூ.2 கோடிக்கு பேரம் பேசி வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் படை விரைந்து சென்று அவர்களை மடக்கியது. ஆனாலும் அதில் ஓருவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து 7 பேரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு¸

சாமியார்¸ பா.ஜ.க செயலாளர்¸ ஓட்டல் அதிபர் கைது

1)கோவிந்தராஜ்(வயது.53). சாமியார். திருவண்ணாமலை வ.உ.சி நகரைச் சேர்ந்தவர். கிரிவலப்பாதையில் இடைக்காட்டு சித்தர் குடில் வைத்திருக்கிறார். 

2)தீபக்(55). திருவண்ணாமலை புதிய கார்கனாத் தெருவைச் சேர்ந்தவர். சாய்பாபா கோயில் நிர்வாகி.

சாமியார்¸ பா.ஜ.க செயலாளர்¸ ஓட்டல் அதிபர் கைது

3)சதீஷ்(21). ராணிப்பேட்டை.

சாமியார்¸ பா.ஜ.க செயலாளர்¸ ஓட்டல் அதிபர் கைது

4)உமாசங்கர்(38).வேட்டவலம். பா.ஜ.கவில் ஒன்றிய பொதுச் செயலாளராக  உள்ளார். 

5)குப்பன் என்கிற அரசு(50) ஜெயங்குண்டம்¸ செஞ்சி தாலுகா.

6)அஸ்வத்தாமன்(28)¸ பேகோபுரத் தெரு¸ திருவண்ணாமலை. இரட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ரமணபவன் ஓட்டல் உரிமையாளர். 

சாமியார்¸ பா.ஜ.க செயலாளர்¸ ஓட்டல் அதிபர் கைது

7)நாகராஜ்(41) தங்கராம்பட்டி¸ தேனி மாவட்டம்.

தப்பியோடிய அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ராம்குமாரை(32) தேடி வருகின்றனர். 

போலி வலம்புரி சங்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் இரண்டையும் போலீசார் கைது செய்தனர். 

இந்த கும்பல் பக்கெட்டில் வலம்புரி சங்கை போட்டு அதன் மீது அரிசியை கொட்டி விடுகின்றனர். சிறிது நேரத்தில் அரிசியில் மூழ்கிய வலம்புரி சங்கு அரிசியை பிளந்து கொண்டு மேலே வருகிறது. இதே போல் வலம்புரி சங்கில் ஊற்றப்படும் பால் கீழே கொட்டப்படும் போது தயிராக மாறுகிறது. இதை அந்த கும்பல் செயல் விளக்கமாக காட்டி வலம்புரி சங்கை விற்பது தெரிய வந்தது. 

போலீஸ் விசாரணையில் சிறிய பேட்டரி பொருத்தப்பட்டதால் வலம்புரி சங்கு அரிசியிலிருந்து வருவதும்¸ கெமிக்கல் பவுடர் தடவப்பட்டதால் அதில் ஊற்றப்படும் பால் தயிராக மாறுவதும் தெரிய வந்தது. திருவண்ணாமலை அடுத்த வேப்பூர் செக்கடியைச் சேர்ந்த பரணி(46) என்பவரை அவர்கள் ஏமாற்ற முயன்றுள்ளனர். அவரிடம் இந்த போலி வலம்புரி சங்கை ரூ.2 கோடி அளவிற்கு பேரம் பேசும் போதுதான் போலீசில் சிக்கியுள்ளனர். 

கைது செய்யப்பட்ட 7 பேரும் மாஜூஸ்திரேட்டு உத்தரவின் பேரில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 

கிரிவலப்பாதையில் பக்தர்களை ஏமாற்றி வரும் இந்த மாதிரியான போலி ஆசாமிகளையும்¸ போலி ஆசிரமங்களையும் போலீசார் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

வீடியோவை காண இந்த ID-க்கு செல்லவும். https://www.facebook.com/profile.php?id=100010512168519

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!