10¸12ம் வகுப்பு மாணவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவை அக்டோபர் 1ந் தேதிக்குள் செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெறும் போதே பள்ளிகளிலேயே வேலை வாய்ப்புக்காக பதிவு செய்யும் நடைமுறை கடந்த 2014ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலங்களில் நேரில் செல்லும் மாணவ- மாணவியர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பள்ளிகளில் மட்டுமன்றி ஆன்லைனிலும் பதிவு செய்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டு அக்டோபர் 1ந் தேதி வரை மாணவ- மாணவியர்கள் வேலை வாய்ப்பு பதிவுகளை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸
10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10 மற்றும் 12ம் வகுப்பு கல்வி தகுதியினை பதிவு செய்ய வேலை வாய்ப்பு ஆதார் அட்டை எண் குடும்ப அட்டை எண் கைபேசி எண் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று எடுத்து வர வேண்டும்.
கடந்த 17ந்தேதி முதல் அக்டோபர் 1ந்தேதி வரை வேலைவாய்ப்பு பதிவுப் பணி அந்தந்த பள்ளிகளிலேயே மேற்கொள்ளப்படும். பதிவுப் பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். மேலும் வேலை வாய்ப்புத் துறை இணைய தளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இணைய தள முகவரி:- https://www.tnvelaivaaippu.gov.in/
10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.