Homeசெய்திகள்சிறுவன்-சிறுமிகள் உள்பட 9 பேர் தீக்குளிக்க முயற்சி

சிறுவன்-சிறுமிகள் உள்பட 9 பேர் தீக்குளிக்க முயற்சி

5 பிள்ளைகளோடு குடும்பமே தீக்குளிக்க முயற்சி

நிலத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சிறுவன்-சிறுமிகள் உள்பட 9 பேர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவண்ணாமலை அடுத்த கலசபாக்கம் வட்டம் சீனந்தல் கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரோஜா. விதவை. கணவர் பெயர் சிதம்பரம். இவருக்கு கடந்த 2005ம் ஆண்டு 1 ஏக்கர் 15 செண்ட் நிலத்திற்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக சரோஜா¸ பட்டா வழங்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்து குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில் பட்டா வழங்கப்பட்ட நிலம் அரசு கணக்கில் ஏற்றப்படாமல் இருந்து வருகிறதாம். இதுபற்றி சரோஜா அரசு பதிவேட்டில் பதிவு செய்து தரும்படி அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியும் அதிகாரிகள் பாராமுகமாக இருந்து வந்தார்களாம். இந்நிலையில் சரோஜா அனுபவித்து வந்த 1 ஏக்கர் 15 செண்ட் பட்டா இடத்தை பஞ்சமி இடம் என கூறி சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்தனர். இதற்கு அந்த ஊர் கிராம நிர்வாக அதிகாரி¸ கடலாடி போலீசார் உடந்தையாக இருந்து வருவதாக சரோஜா தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். 

மேலும் செங்கம் அடுத்த முன்னூர்மங்கலம் பேட்டையைச் சேர்ந்த ராஜா¸ சக்திவேல்¸ முருகன்¸ சுமதி¸ ரத்தினம் ஆகியோர் நள்ளிரவு நேரத்தில் சரோஜாவின் கொல்லக் கொட்டாய்க்கு சென்று நிலத்தை காலி செய்யும்படி மிரட்டி வந்துள்ளனர். இவர்களால் கடந்த 4 மாதங்களாக சரோஜாவின் குடும்பத்திற்கு பல்வேறு இடையூறுகளை சந்தித்து வந்துள்ளது. சீனந்தல் கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் வசித்து வருவதால் ராஜா தரப்பினரால் தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சரோஜா தரப்பினர் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். 

5 பிள்ளைகளோடு குடும்பமே தீக்குளிக்க முயற்சி

இதனால் வேறு வழியின்றி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு வந்த சரோஜா குடும்பத்தினர் ஒரு சிறுவன்¸4 சிறுமிகள் உள்பட 9 பேர் திடீரென தங்கள் உடம்பின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றனர். 

அந்த நேரத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்து தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பட்டா இடத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது நிலத்தை மீட்டு தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

ஒரே நேரத்தில் 9 பேர் தீக்குளிக்க முயன்றது கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை உண்டாக்கியது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!