Homeசுகாதாரம்பிரபல அசைவ ஓட்டலில் சாப்பிட்ட சிறுமி பலி

பிரபல அசைவ ஓட்டலில் சாப்பிட்ட சிறுமி பலி

பிரபல அசைவ ஓட்டலில் சாப்பிட்ட சிறுமி பலி

ஆரணியில் பிரபல அசைவ ஓட்டலில் சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக இறந்தார். 19 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் நியூ 7 ஸ்டார் பிரியாணி சென்டர் என்ற அசைவ ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலை ஆரணியை சேர்ந்த காதர் பாட்ஷா என்பவர் நடத்தி வருகிறார். ஆரணி நகரில் பிரபல ஓட்டல்களில் ஒன்றான இந்த ஓட்டலில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஆரணிக்கு சென்றால் இந்த ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவதை சிலர் வழக்கமாக கொண்டிருந்தனர். 

இந்நிலையில் ஆரணி அருகே துந்தரீகம்பட்டு ஊராட்சிக்குபட்ட லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது மனைவி பிரியாதர்ஷினி¸ மகன் சரண்(14)¸ மகள் லக்ஷனா(வயது 10) ஆகியோருடன் ஆரணி நியூ 7 ஸ்டார் பிரியாணி சென்டருக்கு சென்று பிரியாணி மற்றும் தந்தூரி வகைகளை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி¸ மயக்கம் ஏற்பட்டது. அனைவரும் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பிறகு ஆனந்த்¸ பிரியதர்ஷினி¸ சரண் ஆகியோர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி  லக்ஷனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

பிரபல அசைவ ஓட்டலில் சாப்பிட்ட சிறுமி பலி

இதே போல் நியூ 7 ஸ்டார் பிரியாணி சென்டரில் தந்தூரி சிக்கன்¸ பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வாங்கி சாப்பிட்டவர்களுக்கும் வாந்தி- மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையிலும்¸ தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ஜாகிர் (30) பாத்திமா¸ முகமது(4) விஷ்ணு¸ சீனிவாசன்¸ யாகூப்¸ திலகவதி¸ சரவணன்¸ ஆரணி அருகே பையூர் ஊராட்சிக்குபட்ட எத்திராஜ் நகர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் பாஸ்கரன்¸ சந்தியா மற்றும் குழந்தை பிரணவ்(4)¸ செங்கம் தாலுக்கா காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த தமிழரசன்(21)¸ மோனிகா(15)¸ கார்த்திகா (16)¸ லோகேஷ் (15) உள்பட  19 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஒட்டலில் உணவருந்தி சிறுமி பலியான சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பையும்¸ சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் சாப்பிட்ட உணவில் என்ன கலந்திருந்தது என்பது தெரியவில்லை. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சென்று உணவு மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பிரபல அசைவ ஓட்டலில் சாப்பிட்ட சிறுமி பலி

தகவல் கிடைத்ததும் ஆரணி கோட்டாச்சியர் கவிதா¸ ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் ஆகியோர் சம்பவம் நடந்த ஓட்டலுக்கும்¸ ஆரணி அரசு மருத்துவமனைக்கும் சென்று விசாரணை நடத்தினர். பிறகு நியூ 7 ஸ்டார் பிரியாணி சென்டர் கடையை பூட்டி சீல் வைத்தனர். 

பெரும்பாலான ஓட்டல்களில் உணவு தயாரிக்கம் இடம் அசுத்தமாக காணப்படுகிறது. இந்த இடத்தை பார்த்தால் சாப்பிடவே தோணாது. அதே போல் ஓட்டல் பணியாளர்களும்¸ தலை¸ கைகளில் உறை அணிந்து கொண்டு உணவு தயாரிப்பதில்லை. உணவையும் பரிமாறுவதில்லை. அசைவ ஓட்டல்களில் கெட்டுப் போன சிக்கனை கொண்டு உணவு தயாரிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இது சில வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் சில அசைவ உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் நடத்திய சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

See also  டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!