திருவண்ணாமலை நகரில் புதிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது.
அதன்படி திருவண்ணாமலை பஜாரில் இனி ஒரு பக்கம் மட்டுமே பார்க்கிங் செய்ய முடியும். அதே போல் பஸ் நிலையத்திற்குள் அரசு மற்றும் தனியார் பஸ்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட உள்ளது.
மாவட்ட தலைநகராகவும்¸ ஆன்மீக நகரமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி¸ நேற்று இரவு திடீர் என சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நகர் பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு காரணம் சாலையோரம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் முறையில்லாம் நிறுத்துவதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கட்டப்படுத்த என்ன நடவடிககை எடுக்கலாம் என எஸ்பி ஆய்வு செய்தார். திருவண்ணாமலையில் பல்வேறு பகுதிகளில் நடந்து சென்று பார்வையிட்டார்.
அவருடன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி மற்றும் இன்ஸ்பெக்டர்கள்¸ சப்-இன்ஸ்பெக்டர்கள் சென்றிருந்தனர். அவர்களுடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி ஆலோசனை செய்தார்.
இதில் தேரடி வீதி¸ சின்னக்கடை வீதி¸ காந்திசிலை உள்ளிட்ட போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில்¸ வாகன நெரிசலை கட்டுப்படுத்த சோதனை முறையாக சாலையின் ஒரு புறம் மட்டுமே வாகனங்கள் நிறுத்த அனுமதிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதே போல் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்குள் அரசு மற்றும் தனியார் பஸ்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல தடை விதிப்பது எனவும்¸ தற்போது வேலூர் பஸ் நிறுத்தப்படும் வழியாக வெளியேறும் பஸ்கள் அனைத்தையும் முத்துவிநாயகர் கோயில் தெரு வழியாக வெளியேற அனுமதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
சோதனை முறையில் 3 நாட்கள் இதை அமுல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இந்த சோதனை முறை வருகிற திங்கட்கிழமை (27-09-2021) முதல் நடைமுறைக்கு வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.