Homeசெய்திகள்ரவுடிகள் கைது- பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

ரவுடிகள் கைது- பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

ரவுடிகள் கைது- பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீசார் நடத்திய வேட்டையில் 110 ரவுடிகள் கைது செய்யப்பட்டு¸பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் போலீசார் கடந்த 3 நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் தமிழகம் முழுவதும் 2ஆயிரத்து 512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு 934 துப்பாக்கி¸ கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

ரவுடிகள் கைது- பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு உத்தரவுப்படி¸ வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார் மேற்பார்வையில்¸ வேலூர் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு வழிகாட்டுதலின்படி¸ திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அ.பவன் குமார் தலைமையில்¸ 23.09.2021 இரவு முதல் 25.09.2021 மாலை வரை முழுவதும் 421 குற்றபின்னணியுடைய மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் (தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்) வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 

ரவுடிகள் கைது- பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

அப்போது சந்தேகத்திற்கிடமான 159 குற்றவாளிகளை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் 59 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 110 குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு சுத்தி¸ 12 கத்தி¸ 6 அரிவாள்¸ 22 வாள் மற்றும் 3 இரும்பு கம்பி உள்ளிட்ட மொத்தம் 44 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரவுடிகள் கைது- பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

அதில் குறிப்பிடத்தக்க நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 44 குற்ற பின்னணியுடைய நபர்கள் வருவாய் கோட்டாட்சியர்களிடம் ஆஜர்படுத்தி நன்னடைத்தைக்கான பிணைப்பத்திரம் பெறப்பட்டும்¸ நிலுவையில் இருந்த 5 நீதிமன்ற பிடிக்கட்டளை குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிடிக்கட்டளை நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நகர உட்கோட்டத்தில் பிடிபட்டவர்களில் திருவண்ணாமலை தி.மு.க பிரமுகர் பங்க் பாபு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் அடங்குவர். இதே போல் திருவண்ணாமலை கிராமிய உட்கோட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் தி.மு.கவைச் சேர்ந்த ஒருவரும் இடம் பெற்றுள்ளார். 

See also  சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைத்த கள்ளக்காதலி

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!