Homeசெய்திகள்இடிந்து விழும் நிலையில் புதிய பள்ளி கட்டிடம்

இடிந்து விழும் நிலையில் புதிய பள்ளி கட்டிடம்

இடிந்து விழும் நிலையில் புதிய பள்ளி கட்டிடம்

திருவண்ணாமலை அருகே ரூ.1கோடியே 60 லட்சத்தில் கட்டப்பட்டு எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்ட பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.  

திருவண்ணாமலை மாவட்டம்¸ கலசப்பாக்கம் வட்டம்¸ காந்தபாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10 வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இங்கு தற்போது 534 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 14 ஆசிரியர்-ஆசிரியைகள் பணியில் உள்ளனர். 

இந்நிலையில் இந்த பள்ளிக்காக புதிய கட்டிடம் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டது. புதிய வகுப்பறைகள்¸ ஆய்வக அறை¸ நூலக அறை¸ கணினி அறை போன்றவற்றுடன் 2 அடுக்கு மாடியுடன் பள்ளி கட்டிடம் ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் கட்டப்பட்டது.

இப்பணிகள் முடிவடைந்து கடந்த 20-2-2018 அன்று அப்போதைய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்¸ கலெக்டர் கந்தசாமி முன்னிலையில் புதிய கட்டிடத்தை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அதன்பிறகு 1 வருடம் மட்டுமே புதிய கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்றன. பின்னர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்ட நிலையில் இந்த பள்ளியும் மூடப்பட்டது. 

கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள் மீது கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சிகள் உதிர்ந்து விழந்த வண்ணம் இருந்தது. மேலும் ஆங்காங்கே கட்டிடத்தில் விரிசல்களும் காணப்பட்டன. இதனால் மேற்கூரை இடித்து விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். 

இடிந்து விழும் நிலையில் புதிய பள்ளி கட்டிடம்
இடிந்து விழும் நிலையில் புதிய பள்ளி கட்டிடம்

இதுபற்றி தங்களது பெற்றோர்களிடம் அவர்கள் தெரிவித்தனர். இப்பிரச்சனை மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து இன்று(28-09-2021) காந்தபாளையத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டார். ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பார்வையிட்ட அவர் ரூ.1கோடியே 60 லட்சத்தில் கட்டி 3 வருடம் ஆன கட்டிடம் ஆங்காங்கே விரிசல் விட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  

டைல்ஸ்கள் அனைத்தும் பெயர்ந்து போயும்¸ பள்ளி கட்டடத்தின் பில்லர்கள்¸ பீம்கள்¸ மற்றும் ஆர்.சி.சி. கூரை பகுதிகள்¸ தலைமையாசிரியர் அறை¸ தரைகள் சேதமடைந்துள்ளதையும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் விரிசலான பகுதிகளை மறுசீரமைப்பு செய்ய உத்தரவிட்டார். 

பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டடத்திற்கு எவ்வித சேதாரமுமின்றி இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டிடத்தை கட்டிய ஒப்பந்தாரர் மூலம் மறுசீரமைப்பு செய்யவும்¸ இதற்கு ஆகும் செலவுகளை அந்த ஒப்பந்ததாரரே ஏற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகளை முடித்து பாதுகாப்பான பள்ளி கட்டிடமாக மாற்ற வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினார். 

இடிந்து விழும் நிலையில் புதிய பள்ளி கட்டிடம்

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர்¸ பள்ளி மாணவ-மாணவியர்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து விட்டு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும்¸ சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்¸ அப்போது பணியில் இருந்த பொதுப்பணித்துறை பொறியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்¸ திட்ட இயக்குநர் மு.பிரதாப்¸ பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டுமானம்) பரிமளா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்¸ துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!