இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலசப்பாக்கத்தில் புதியதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையார் கோயிலில் முதலுதவி மையங்கள் அமைக்கப்படும் என்றும்¸ படவேட்டில் ரூ.3கோடியிலும்¸ செங்கத்தில் ரூ.2 கோடியிலும் புதியதாக திருமண மண்டபங்கள் கட்டப்படும் எனவும் சட்டமன்றத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.
பி.கே.சேகர்பாபு |
மா.மதிவேந்தன் |
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (04.09.2021) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் 2021-22 ஆம் ஆண்டிற்கான தங்கள் துறை சார்ந்த மானியக் கோரிக்கையின் போது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அறிவித்த திட்டங்கள் குறித்த விவரங்கள் வருமாறு¸
இந்து சமய அறநிலையத்துறை
• திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலின் மின்வசதி ரூபாய்.90 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
• திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம்¸ அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வணிக வளாகம் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
• திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கட்டப்படும்.
• அருள்மிகுஅருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் முதலுதவி மருத்துவ மையங்கள் அமையவுள்ளது.
• திருவண்ணாமலை மாவட்டம் அ.கோ.படைவீடு¸ அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் புதிய திருமண மண்டபம் ரூபாய் 3கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
• திருவண்ணாமலை மாவட்டம் புதூர் செங்கம்¸ அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் புதிய திருமண மண்டபம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
குடமுழுக்கு தொடர்பான திருப்பணிகள் செய்யப்படும் கோவில்கள்
• அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்¸ ஆவணியாபுரம் சேத்துப்பட்டு வட்டம்¸ அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் கஸ்தாம்பாடி போளுர் வட்டம்¸ அருள்மிகு பட்சீஸ்வரர் திருக்கோயில் பரிதிபுரம் செய்யார் வட்டம்¸ அருள்மிகு பூத நாராயணபெருமாள் கோயில்¸ தான்தோன்றீஸ்வரர்¸ வல்லபவிநாயகர் திருக்கோயில¸ காமாட்சிஅம்மன் திருக்கோயில்¸ திருவண்ணாமலை நகர் மற்றும் அருள்மிகு தர்மராஜ¸ மாரியம்மன் திருக்கோயில் இரும்பேடு ஆரணிவட்டம்.
• திருத்தேர் காணும் திருக்கோயில்கள் அருள்மிகு ஆதிகேஸ்வரர் பெருமாள் கோயில்¸ இராந்தம் கொரட்டுர் ஆரணிவட்டம்¸ அருள்மிகு போர்மன்னலிங்கேஸ்வரர் திருக்கோயில்¸ மங்கலம் கீழ்பெண்ணாத்தூர் வட்டம்¸
• பெரியகிளாம்பாடி ரேணுகாம்பாள் திருக்கோயில்¸ மோட்டூர் எலத்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குளத்திருப்பணிகள் செய்யப்படும்.
• அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்¸தேசூர் வந்தவாசி வட்டம் திருப்பணிகள் செய்யப்படும்.
சுற்றுலாத்துறை
ஜவ்வாது மலையில் சுற்று சூழலுடன் கூடிய தங்குமிடங்கள்¸ பூங்காக்கள்¸ பல்வேறு சாகச விளையாட்டுகளை ஏற்றுபடுத்தல்¸ பீமன் நீர்வீழ்ச்சி பகுதியை மேம்பாடுத்தல் மற்றும் ஜமுனாமரத்தூர் ஏரியல் புதிய படகுக் குழாம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு திருவண்ணாமலை மாவட்டத்திற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.