Homeஅரசு அறிவிப்புகள்தடுப்பூசி போட்டவர்களுக்குத்தான் டாஸ்மாக்கில் சரக்கு

தடுப்பூசி போட்டவர்களுக்குத்தான் டாஸ்மாக்கில் சரக்கு

தடுப்பூசி போட்டவர்களுக்குத்தான் டாஸ்மாக்கில் சரக்கு

மெகா தடுப்பூசி முகாம் அன்று டாஸ்மாக்கில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுபாட்டல்கள் வழங்கப்படும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.  

தடுப்பூசியை கடைபிடிக்காத கல்லூரிகள் இழுத்து மூடப்படும்- மெகா தடுப்பூசி முகாமை யொட்டி அரசு ஊழியர்களுக்கு லீவு கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மாநிலம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்திட அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் 12.09.2021 தேதி அன்று மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் (Mega Vaccination Camp) நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்¸ மாநிலம் முழுவதும் 25 லட்சம் நபர்களுக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதையொட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்¸ திருவண்ணாமலை மாவட்டத்தில் 12.09.2021 அன்று நடைபெறும் மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளுவது குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் இன்று (08.09.2021) மாலை நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்¸ திட்ட இயக்குநர் மு. பிரதாப், மாவட்ட வன அலுவலர் அருண்லால் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பேசியதாவது¸

திருவண்ணாமலை மாவட்டத்தில்¸ 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 19¸62¸896 ஆகும். 07.09.2021 தேதி வரை 8¸39¸261 நபர்கள் முதல் தவணை தடுப்பூசியும்¸ 1¸45¸257 நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். தலைமை செயலாளர் அறிவுரைப்படி¸ நமது மாவட்டத்தில் 12.09.2021 தேதி அன்று குறைந்த பட்சம் 1¸24¸000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்த இலக்கினை அடைய  முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

தடுப்பூசி போட்டவர்களுக்குத்தான் டாஸ்மாக்கில் சரக்கு

அனைத்து துறையினை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் முகாம் நடைபெறும் நாளான்று களப்பணியில் ஈடுபட வேண்டும். கிராம வாரியாக தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை போட்டுக் கொள்ள வேண்டியவர்கள் விவரம் முன்னதாக கணக்கெடுத்து அவர்களுக்கு 100% தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கவேண்டும். வணிகர் நல வாரியம்¸ தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட அனைத்து வாரிய உறுப்பினர்களுக்கும் 100% தடுப்பூசி போட தொடர்புடைய துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அரசுப்பணியாளர்கள்¸ போக்குவரத்து நிறுவன பணியாளர்கள்¸ வணிக வளாகங்களில் பணிபுரிபவர்கள்¸ தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள்¸ கல்லூரி மாணக்கர்கள்¸ வியாபாரிகள்¸ கடைகளில் வேலை செய்பவர்கள்¸ தனியார் நிறுவனம், கல்லூரிகளில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட அனைவரின் விவரங்களை கிராமம் வாரியாக முன்னதாக கணக்கெடுத்து முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு 100ம%  தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி போடுவதை கடைப்பிடிக்காத கல்லூரிகள் இழுத்து மூடப்படும். 

அனைத்து துறை சார்ந்த தலைமை அலுவலர்களும் தங்கள் துறையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களின் விவரங்களை கணக்கெடுத்து விடுதலின்றி 100% தடுப்பூசி போட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இரண்டு தவணைகளுக்கும் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்னரும் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை இலக்காக வைத்து அவர்களுக்கும் அதிக அளவில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

பிறகு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது¸

கடந்த ஒரு வருடமாக முகக்கவசத்துடன் வாழ்ந்து வருகிறோம். அதனை தவிர்க்க¸ கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வரும் 12.09.2021 அன்று 1¸24¸000 தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 82¸000 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போடவில்லை.

எனவே¸ ஞாயிற்றுக்கிழமை அன்று 973 (860 பஞ்சாயத்து¸ 10 பேரூராட்சி¸ 4 நகராட்சி) தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காலை 07.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை முகாம் நடைபெறும். 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். 12.09.2021 அன்று டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே விற்பனை நடைபெறும். மீறி மது பாட்டல்களை விற்றால் அந்த கடை இழுத்து மூடப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

See also  குவைத் நாட்டில் 500 பெண்களுக்கு வேலைவாய்ப்பு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!