Homeசுகாதாரம்நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை

நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை

நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை

திருவண்ணாமலை மருத்துவமனையில் நிமிடத்திற்கு 1000 லிட்டர் கொள்கலன் திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலை இன்று செயல்பாட்டிற்கு வந்தது.  

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு ஏராளமானோர் இறந்தனர். நுரையீரலில் ஆச்சிஜனை பிரித்தெடுக்கும்  சிறிய பைகளில் வைரஸ் பரவுவதால் உடலில் ஆக்சிஜன் சப்ளை குறைந்து இறப்பு ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

கொரோனா 2வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை கருத்தில் கொண்டு பிரதமர் பாதுகாப்பு நிதி மூலம் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலையை நிறுவும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலை இன்று செயல்பாட்டுக்கு வந்தது.

அழுத்தம் ஸ்விங் உறிஞ்சுதல் ஆக்ஸிஜன் ஆலை ஓட்டம்  (PSA O2 PLANT) பாரத பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதி மூலமாக நாடு முழுவதும் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நிறுவப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மற்றும் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையிலும் நிறுவப்படுகிறது. 

இந்த அழுத்தம் ஸ்விங் உறிஞ்சுதல் ஆக்சிஜன் ஆலை ஓட்டம்  நிறுவுவதின் முக்கிய நோக்கம் கொரோனா பேரிடர் காலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தங்கு தடை இல்லாமல் கிடைப்பதே ஆகும். ஆகாய மண்டலத்தில் உள்ள ஆக்சிஜன்¸ நைட்ரஜன்¸ கார்பன்-டை-ஆக்ஸைடு போன்ற வாயுக்களை உள்ளிழுத்து ஆக்சிஜனை மட்டும் தனியாக பிரித்து மற்ற வாயுக்களை பில்டர் செய்து ஆக்ஸிஜன் மட்டும் குழாய்களின் மூலம் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கொரேனா சிகிச்சை வார்டுகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மூலம் அனுப்புவது இதன் செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் ஆகும். 

நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை

இதன் மூலம் 93 சதவீதம் தூய ஆக்சிஜன் கிடைக்கும். நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது இந்த கொள்கலன் ஆகும். ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை இதன் மூலம் உருவாகிறது. இந்த பிளாண்ட் கொள்கலனின் கட்டுமான மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும். 

இந்த 1000 லிட்டர் கொள்கலன் திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலையினை தமிழக சட்டபேரவைத் துணைத் தலைவர் கு. பிச்சாண்டி இன்று (7-10-2021) துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்¸ நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை¸ திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் திருமால் பாபு¸ மருத்துவர்கள்¸ செலிவியர்கள்¸ மருத்துவ பணியாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

See also  புதிய பஸ் நிலையம் அமைக்க குப்பைகள் அகற்றம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!