Homeசெய்திகள்பெரிய தேர் அருகே ஹை வோல்டேஜ் டிரான்ஸ்பார்மர்

பெரிய தேர் அருகே ஹை வோல்டேஜ் டிரான்ஸ்பார்மர்

புதிய லைன் அமைத்தல் 

திருவண்ணாமலை அண்ணாமலையார் தேர் அருகே ஹை வோல்டேஜ் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படுவதற்கு விசுவ இந்து பரிஷத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

பிரபல நகைக் கடை பயன் பெறுவதற்காக பெரிய அளவில் பணம் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. 

மிகப்பழம் பெறும் சரித்திரத்தை கொண்டுள்ள திருவண்ணாமலையில் வருடந்தோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவில் 7ம் நாள் திருவிழாவாக தேர் திருவிழா நடைபெறும். ஊர் கூடி தேர் இழுப்போம் என்பதற்கேற்ப தேர்களில் வீதி உலா வரும் உற்சவர்¸ மக்களை ஒன்று கூட வைத்து அவர்களுக்கு நயன தீட்சையை வழங்கி அவர்களின் குறைகளை தீர்ப்பார் என்கிற ஐதீகமும் உண்டு. தேர் திருவிழாவின் போது மாடவீதிகளில நெரிசல் மிகுந்து காணப்படும். லட்சக்கணக்கான மக்கள் தேரோட்டத்தை காண குவிந்திருப்பார்கள். 

அப்படிப்பட்ட தேரோட்டம் சென்ற ஆண்டு கொரோனா பரவல் காரணத்தை காட்டி ரத்து செய்யப்பட்டது பக்தர்களை வேதனைப்படுத்தியுள்ள நிலையில் தற்போது பெரிய தேர் எனப்படும் அண்ணாமலையார் தேர் அருகே மின்சார வாரியம் ஹை வோல்டேஜ் டிரான்ஸ்பார்மர் அமைத்து வருவது இன்னொரு வேதனையாக அமைந்திருக்கிறது. 

இதைக் கேள்விப்பட்டதும் இன்று காலை(18-10-2021) டிரான்ஸ்பார்மர் அமைக்கும் இடத்தில் விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் எம்.கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் கூடி தேர் அருகே டிரான்ஸ்பார்மர் அமைக்கக் கூடாது என மின்சார வாரிய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கோயில் அதிகாரிகளும் அங்கு வந்து மின்சார வாரிய அதிகாரிகளுடன் பேசினார்கள். 

பெரிய தேர் அருகே ஹை வோல்டேஜ் டிரான்ஸ்பார்மர்
வாக்குவாதம் 

கோயில் இடத்தில் எந்த வித அனுமதியின்றி மின்சார வாரியம் டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு விசுவ இந்து பரிஷத் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் இப்பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால் அதன்பிறகு வயர்களை இணைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். 

இது குறித்து விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு¸

புகழ்பெற்ற ஆசியாவின் இரண்டாவது பெரிய இராஜகோபுரம் அருகில் அமைய போகும் மின் மாற்றி ஆபத்தானது. மேலும் பழமை வாய்ந்த பெரிய தேருக்கு அருகில் அமைவது ஆபத்தை ஏற்படுத்தும். தற்போது அமைய உள்ள மின்மாற்றி அதிக வோல்டேக் கொண்டது. அதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மின் மாற்றி அமைக்க நகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?¸ அறநிலையத்துறையிடம் அனுமதிப்பெறப்பட்டுள்ளதா? என்பதற்கு சரியான பதில் இல்லை. இந்த மின் மாற்றியினால் சாமி வீதி உலா வரும் இடத்தில் பக்தர் அதிகம் கூடும் இடத்தில் பாதுகாப்பு கேள்வி குறியாகி விடும். இந்த வழியாகத்தான் திருவூடல் உற்சவத்திற்கு மூன்றாவது சுற்று சுவாமி வலம் வருதலும்¸ 8வது திருவிழாவில் குதிரை வாகனத்தில் சாமி உலா நடைபெறுதலும் நடைபெறும். 

பெரிய தேர் அருகே ஹை வோல்டேஜ் டிரான்ஸ்பார்மர்
புதிய மின் கம்பம்  அமைத்தல் 

இதையெல்லாம் எடுத்துச் சொல்லியும் மின்சார வாரிய அதிகாரிகள் காதில் வாங்கவில்லை. இப்போது பெரிய தேர் அருகில் அமைக்கப்படும் மின் மாற்றி புதிய மின்மாற்றி இல்லை. தேரடித் தெருவில் ஏ.வி.ஆர் நகை கடை அருகில் உள்ள மின் மாற்றிதான் இங்கு மாற்றி அமைக்கப்படுகிறது. இதற்காக அந்த நகைக்கடை நிறுவனம் மின்சார வாரியத்திற்கு ரூ.5 லட்சத்து 90 ஆயிரத்தை கட்டணமாக செலுத்தியிருப்பதாக அறிகிறோம். இது மட்டுமன்றி ரூ.15 லட்சம் வரை பணம் கைமாறியிருக்கிறது. ஆனால் இந்த மின் மாற்றியை மாற்றி அமைக்க பஜாரில் சரியான இடம் கிடைக்காமல் மின்சார வாரிய அதிகாரிகள் கோயில் இடத்தில் அமைத்து விட்டனர். இதற்கு ஆளும் கட்சியினரின் உறுதுணையாக இருப்பதாக தெரிய வருகிறது.  

எனவே தேருக்கும்¸ பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் இந்த மின் மாற்றியை வேறு இடத்துக்கு மாற்றா விட்டால் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் மின் மாற்றி அமைக்கப்படும் இடத்தில் பக்தர்களையும்¸ ஆன்மிக பெரியோர்களையும்¸ இந்து இயக்கங்களையும் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

பெரிய தேர் அருகே ஹை வோல்டேஜ் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!