Homeஅரசு அறிவிப்புகள்எஸ்.டி சாதிசான்று: இ.சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

எஸ்.டி சாதிசான்று: இ.சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

எஸ்.டி சாதிசான்று: இ.சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

இ.சேவை மையங்களில் ரூ.60 மட்டும் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பழங்குடியினர் சாதி சான்று பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். 

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸

திருவண்ணாமலை மாவட்டத்தில் கையேடு வழியாக வழங்கப்பட்டுவந்த பழங்குடியினர் சாதி சான்று (ST Certificate) அரசு பொது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வழி வகைகள் செய்யப்பட்டுள்ளது. 

எஸ்.டி சாதிசான்று: இ.சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

இனி வருங்காலங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினர் சாதி சான்று கோரும் பொதுமக்கள்¸ தங்களிடம் உள்ள உரிய ஆதார ஆவணங்களான ஆதார் அட்டை¸ குடும்ப அட்டை¸ கல்வி மாற்றுச்சான்றிதழ்¸ தாய் அல்லது தந்தை சாதிச்சான்று அல்லது உறவினர் சாதிச்சான்று ஆகிய ஆவணங்களுடன் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். 

எஸ்.டி சாதிசான்று: இ.சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

எனவே பழங்குடியினர் சாதி சான்று வேண்டுவோர் தங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் ரூ.60 மட்டும் கட்டணம் செலுத்தி பழங்குடியினர் சாதி சான்று பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!