Homeசெய்திகள்ஏரி உடைந்தது-மிதக்கும் வீடுகள்¸குடிபெயரும் மக்கள்

ஏரி உடைந்தது-மிதக்கும் வீடுகள்¸குடிபெயரும் மக்கள்

ஏரி உடைந்தது-மிதக்கும் வீடுகள்¸குடிபெயரும் மக்கள்

திருவண்ணாமலையில் நேற்று இரவு பெய்த கன மழையால் கொம்பன் ஏரி உடைந்தது. வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். 

திருவண்ணாமலை பகுதியில் கடந்த சில தினங்களாக செய்துவரும் கனமழையால் ஏரிகள் நிரம்பி ரோடுகளில் வழிந்தோடி குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்துள்ளது.தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

ஏரி உடைந்தது-மிதக்கும் வீடுகள்¸குடிபெயரும் மக்கள்

ஏரி உடைந்தது-மிதக்கும் வீடுகள்¸குடிபெயரும் மக்கள்

நேற்று இரவு திருவண்ணாமலையில் மழை வெளுத்து வாங்கியது. இரண்டாவது நாளாக குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். பலர் வீடுகளை காலி செய்து உடைமைகளுடன் உற்றார்¸ உறவினர்கள் வீடுகளுக்கு குடிபெயர்ந்தனர். திருவண்ணாமலையில்  நேற்று இரவு முதல் இன்று காலை வரை 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக நள்ளிரவு இரண்டு மணி நேரம் இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால் ஏரிகளில் தண்ணீர் பீறிட்டுக்கொண்டு வெளியேறியது. இதில் கீழ்நாச்சிப்பட்டு அருகே உள்ள கொம்பன் ஏரி உடைந்து ரிங் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்தது.அந்தப் பகுதியே தண்ணீர் மயமாக காட்சி அளிக்கிறது. 

ரோடுகளில் முழங்கால் அளவு தண்ணீர் ஓடியதால் அதில் நீந்தி வந்த மீன்களை கிராம மக்கள் பிடித்தனர். கோல்களால் அடித்து பெரிய சைஸ் மீன்களை அள்ளிச் சென்றனர். ஒரு மீன் ஏறக்குறைய 10 கிலோ இருந்ததால் சந்தோஷத்துடன் அவற்றை பிடித்து சென்றனர். 

ஏரி உடைந்தது-மிதக்கும் வீடுகள்¸குடிபெயரும் மக்கள்
ஏரி உடைந்தது-மிதக்கும் வீடுகள்¸குடிபெயரும் மக்கள்

வேங்கிக்கால் குறிஞ்சி நகர்¸ திண்டிவனம் ரோடு சுபலட்சுமி நகர் ஆகியவை ஓடைகளை தூர்த்து அமைக்கப்பட்டதாகும். இதனால் இந்த மழையில் அப்பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஒவ்வொரு ஏரிக்கும் உள்ள தொடர்பு ஓடைகள்¸ கால்வாய்கள் கடந்த காலங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் போக வழி தெரியாமல் தண்ணீர் வயல்களிலும்¸ குடியிருப்பு பகுதிகளிலும் தஞ்சமடைந்து இருப்பதை பார்க்க முடிகிறது. தயவு தாட்சண்யம் பார்க்காமல் ஒரு சிலரின் நன்மைகளை மட்டும் கருதாமல் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினால் மட்டுமே இந்த பிரச்சனையிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்பது அனைவரது கருத்தாக உள்ளது.

இந்நிலையில் கொம்பன் ஏரி உடைந்ததை கேள்விப்பட்டதும் அமைச்சர் எ.வ.வேலு அந்த ஏரியை நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது¸ 

திருவண்ணாமலையில் 22.10.2021 அன்று இரவும் 23.10.2021 அன்று இரவும் எதிர்பாரத வகையில் இரவு நேரத்திலே பெய்த கன மழையின் காரணத்தினால் திருவண்ணாமலையில் சுற்றி இருக்கின்ற அனைத்து ஏரியும் நிரம்பி உடைகின்ற தருவாயில் உள்ள சில ஏரிகளும்¸ கொள்ளளவு அதிகமான காரணத்தினால் சில ஏரிகள் வழிந்து ஒடிக்கொண்டிருக்கிற சூழ்நிலையும் இன்று உள்ளது. அதிலும் குறிப்பாக ஆடையூர் ஏரி¸ வேங்கிக்கால் ஏரி¸ வெங்காய வேலூர் ஏரி¸ அதனை தொடர்ந்து கீழ்நாத்தூர் ஏரிக்கு மொத்த தண்ணீரும் வந்து துரிஞ்சலாறுக்கு செல்கின்ற வழியில் சில இடங்களில் தடுப்புகள் உள்ளது.

ஏரி உடைந்தது-மிதக்கும் வீடுகள்¸குடிபெயரும் மக்கள்

இந்த தடுப்புகளை எல்லாம்  அப்புறப்படுத்த வேண்டுமென்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடைய ஆணையை ஏற்று பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்கள் இந்த பணியில் ஈடுப்பட்டு பணியாற்றி வருகின்றார்கள். குறிப்பாக நெடுஞ்சாலை துறை மூலமாக  கிட்டத்தட்ட 20 ஜே.சி.பி.இயந்திரங்களை கொண்டு அடைப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தற்போது உள்ள இந்த நிலையை சொல்ல வேண்டும் என்றால் 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் இதுபோன்ற பெரும் மழை பெய்து இருக்கிறது. இன்னும் இரண்டொரு தினங்களிலே தண்ணீர் செல்லும் பாதையை அகலப்படுத்தி துரிஞ்சலாறுக்கு சென்று கலக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ்¸ நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. பவன் குமார் ரெட்டி¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் மு. பிரதாப் ஆகியோர் உடன் இருந்தனர். 

See also  திருவண்ணாமலை: ஆடி காரில் எரிசாராயம் கடத்தல்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!