திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு நாளை தங்கத் தேரை பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறார்.
அவரது நிகழ்ச்சி நிரல் பட்டியலில் தீப திருவிழா ஏற்பாடுகள் குறித்த விவரங்கள் ஏதும் இடம் பெறவில்லை.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நாளை 27.10.2021 (புதன்கிழமை) காலை7 மணி முதல் மாலை 6 மணி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அவரது சுற்றுப்பயண விவரம் வருமாறு.
நேரம்- காலை 7மணியிலிருந்து 8.30 மணி வரை
1) அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் சாமி தரிசனம்.
2) தங்க ரதம் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருதல்.
3) ஓதுவார் பயிற்சிப் பள்ளி தொடங்கி வைத்தல்.
4) கலைஞர் தலமரக்கன்றுகள் நடுதல்.
காலை 8.45 மணி– மருத்துவ முதலுதவி மையம் ஆய்வு.
இடம் – தென் ஒத்தவடைத் தெரு¸ திருவண்ணாமலை.
காலை 9 மணி– பக்தர்கள் தங்கும் விடுதி பார்வையிட்டு¸ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தல்
இடம்- ஈசான்ய லிங்கம் அருகில்¸ திருவண்ணாமலை.
காலை 10 மணி– அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டப பணிகள் ஆய்வு.
இடம்-கிரிவலப்பாதை¸ திருவண்ணாமலை.
10.30மணி– திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்துதல்.
1) கோவில் கிரிவலப்பாதை மின் இணைப்பு குறித்து ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் ஆய்வு.
2) திருக்கோவில் கடை வாடகைத்தாரர்களுடன் ஆலோசனை
3) அறநிலையத்துறை சம்மந்தப்பட்ட திருக்கோவில்கள் வளர்ச்சிப் பணிகள் குறித்து நாடாளுமன்ற¸ சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட¸ ஒன்றியக்குழு தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.
4) திருக்கோவில் உள் மாடவீதி பகுதியில் (ஆறாம்பிராகரம்) சாலை மேம்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்.
பிற்பகல் 2.30 மணி– காஞ்சி அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில் ஆய்வு.
3 மணி– புதூர்செங்கம் மாரியம்மன் திருக்கோவில் 3.00 மணி வளாகத்தில் புதிய திருமண மண்டபம் அமைக்க இடம் தேர்வு.
3-30 மணி
1) தென்மாதிமங்கலம் புதிய அரசு கலைக்கல்லூரிக்கு இடம் தேர்வு செய்தல்.
2) தென்மாதிமங்கலம் வணிகவளாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல்.
மாலை 4.15 மணி
1) படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு தேதி அறிவித்தல்.
2) பொங்கல் மண்டபம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு
3) புதிய அன்னதானம் கூடம் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல்.
4) புதிய திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டல்.
5) கலைஞர் தலமரக்கன்றுகள் நடுதல்.
5.00 மணி
1) யோகராமச்சந்திர பெருமாள் கோயில் லட்சுமி யானை நீச்சல் குளம் பார்வையிடல்.
2) டி.வி.எஸ் நிறுவனம் நன்கொடை மூலம் கட்டப்பட்ட அர்ச்சர்கர்கள் குடியிருப்புக்கான சாவி வழங்குதல்.
5.30 மணி– ஆரணி வட்டம்¸ கொளத்தூர் அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோவில் மூன்று நிலை இராஜகோபுரம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தல்.
6.00 மணி– செய்யாறு வட்டம் முனுகப்பட்டு அருள்மிகு பச்சையம்மன் திருக்கோவில் வணிகவளாகம் திறந்து வைத்தல்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புகழ் பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் விழா சம்மந்தமான முன்னேற்பாடு குறித்த நிகழ்ச்சிகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.