Homeசெய்திகள்திருவண்ணாமலை:பிரியாணி வாங்க முண்டியடித்த கூட்டம்

திருவண்ணாமலை:பிரியாணி வாங்க முண்டியடித்த கூட்டம்

திருவண்ணாமலை:பிரியாணி வாங்க முண்டியடித்த கூட்டம்

ரூ.100க்கு மட்டன் பிரியாணியையும்¸ ரூ.50க்கு சிக்கன் பிரியாணியையும் வாங்க கூட்டம் அலை மோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

கொரோனா விதிமுறைகளை சிறிதும் பின்பற்றாமல் கடை உரிமையாளர்கள் வியாபாரத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். 

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் எம்.எஸ் கொங்கு மெஸ் என்ற ஓட்டல் கடை இன்று துவங்கப்பட்டது¸ துவக்க நாளான இன்று மட்டும் சலுகை விலையில் மட்டன் பிரியாணி 100 ரூபாய்க்கும்¸ சிக்கன் பிரியாணி 50 ரூபாய்க்கும் வழங்கப்படும் என கடை உரிமையாளர்களால் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் 5 ரூபாய்க்கு டீயும்¸ 20 ரூபாய்க்கு மினி டிபனும் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியிருந்தனர். 

இதனால் காலை முதலே கடை முன்பு கூட்டம் சேர ஆரம்பித்து விட்டது. நேரம் ஆக¸ ஆக கூட்டம் அதிகரித்தது. பகல் 1 மணிக்கெல்லாம் பிரியாணியை வாங்க முண்டியத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கடை முன்பு ரோட்டில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

திருவண்ணாமலை:பிரியாணி வாங்க முண்டியடித்த கூட்டம்

சிறிது நேரத்தில் மட்டன் பிரியாணி தீர்ந்து விட்டது¸ சிக்கன் பிரியாணி வாங்கிக் கொள்ளுங்கள் என கடைக்காரர்கள் சொன்னதால் மட்டன் பிரியாணிக்கு பணம் கட்டி டோக்கன் வாங்கி நீண்ட நேரம் காத்திருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு ஒன்றரை மணி நேரம் காத்திருந்து பிரியாணி வாங்கிச் சென்றனர். 

கடை நிர்வாகிகள்¸ பணியாளர்கள் யாரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை. கூட்டத்தை ஒழுங்கு படுத்தவும் ஏற்பாடு செய்யவில்லை. ஒரு அளவு என்று இல்லாமல் கேட்டவருக்கெல்லாம் பிரியாணிக்கு பணத்தை வாங்கிக் கொண்டு டோக்கனை வாரி வழங்கியதாலே கூட்டம் அலைமோதியது. பிரியாணிக்கு ஆசைப்பட்டு வேலை வெட்டியை விட்டு விட்டு காத்திருந்த பலர் பிரியாணி தீர்ந்து விட்டதால் கடைக்காரை திட்டி தீர்த்து பணத்தை ரிட்டன் வாங்கிச் சென்றனர். 

ஏற்கனவே வேங்கிக்கால் ஏரி நிரம்பி தண்ணீர் சாலைகளில் ஓடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரியாணி கடைக்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து நெரிசலிலும் சிக்கி மக்கள் படாதபாடு பட்டனர். அந்த பக்கமாக சென்ற காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் இதை கண்டும் காணாமல் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.  

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!