Homeசெய்திகள்கயிறு இழுக்கும் போட்டி-திருவண்ணாமலை அபார வெற்றி

கயிறு இழுக்கும் போட்டி-திருவண்ணாமலை அபார வெற்றி

கயிறு இழுக்கும் போட்டி-திருவண்ணாமலை அபார வெற்றி

திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் திருவண்ணாமலை அணி அபார வெற்றி பெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கயிறு இழுக்கும் போட்டி 1920 ஆம் ஆண்டு வரை ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு அது நீக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் விசேஷ நாட்களில் நடத்தப்படும் போட்டிகளில் கயிறு இழுக்கும் போட்டியும் அங்கம் வகித்து வருகிறது. 

பள்ளி அளவில் இப்போட்டியை ஊக்குவிக்க தமிழ்நாடு கயிறு இழுத்தல் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இப் போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ்களை பெறும் மாணவ- மாணவியர்கள் உயர் கல்வியிலும் வேலை வாய்ப்புகளையும் முன்னுரிமை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலையில் முதன்முறையாக இச்சங்கத்தின் திருவண்ணாமலை கிளை சார்பில் 21வது மாநில கயிறு இழுக்கும போட்டி  நடத்தப்பட்டன. திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நேற்றும் இன்றும் இப்போட்டிகள் நடைபெற்றன.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அங்கீகாரத்துடன் நடைபெற்ற இப்போட்டியில்18 மாவட்டங்களில் இருந்து 550 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்கள்¸ 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகிய பிரிவினருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதே போல் ஆண்¸ பெண் கலப்பு அணிக்கான போட்டிகளும் நடைபெற்றன. 

கயிறு இழுக்கும் போட்டி-திருவண்ணாமலை அபார வெற்றி
கயிறு இழுக்கும் போட்டி-திருவண்ணாமலை அபார வெற்றி

காலிறுதி¸ அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகளில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் விருதுநகர் அணிகள் சாதனை படைத்தன. குறிப்பாக ராணிப்பேட்டை அணி அதிக புள்ளிகளை பெற்றது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில் திருவண்ணாமலை மற்றும் நீலகிரி அணிகள் களம் கண்டன. 

முதல் ரவுண்டில் நீலகிரி அணியும்¸ இரண்டாவது ரவுண்டில் திருவண்ணாமலை அணியும் வெற்றி பெற்றதால் மூன்றாவது ரவுண்டு நடத்தப்பட்டது. திருவண்ணாமலை அணி வீரர்கள் ஆக்ரோஷமாக கயிறு இழுத்து நீலகிரி அணி வீரர்களை நிலைகுனிய செய்து வெற்றி பெற்றனர். இதேபோல் 19 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான (சீனியர்) இறுதிப்போட்டியில் திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை அணிகள் மோதின. இதில் திருவண்ணாமலை அணி அபார வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் சென்றது. 

வெற்றி பெற்ற அணிகளின் விவரங்கள் வருமாறு

17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டி (ஆண்கள்) 

முதல் பரிசு- விருதுநகர்¸ இரண்டாவது பரிசு- வேலூர்¸ மூன்றாவது பரிசு- ராணிப்பேட்டை

17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி (பெண்கள்) 

முதல் பரிசு- விருதுநகர்¸ இரண்டாவது பரிசு-ராணிப்பேட்டை¸ மூன்றாவது பரிசு- கரூர்.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான கலப்பு அணிக்கான போட்டி 

முதல் பரிசு- விருதுநகர்¸ இரண்டாவது பரிசு- ஈரோடு , மூன்றாவது பரிசு- ராணிப்பேட்டை.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டி(ஆண்கள்) 

முதல் பரிசு- திருவண்ணாமலை¸ இரண்டாவது பரிசு- நீலகிரி¸ மூன்றாவது பரிசு- விருதுநகர்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டி (பெண்கள்) 

முதல் பரிசு- ராணிப்பேட்டை¸ இரண்டாவது பரிசு- கடலூர்¸ மூன்றாவது பரிசு- நாமக்கல்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கலப்பு அணிக்கான போட்டி 

முதல் பரிசு- ராணிப்பேட்டை¸ இரண்டாவது பரிசு- ஈரோடு¸ மூன்றாவது பரிசு- கடலூர்

19 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான(சீனியர்)ஆண்களுக்கான போட்டி 

முதல் பரிசு- திருவண்ணாமலை¸ இரண்டாவது பரிசு- ராணிப்பேட்டை

19 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான போட்டி (பெண்கள்) 

முதல் பரிசு- சேலம்¸ இரண்டாவது பரிசு- கரூர்¸ மூன்றாவது பரிசு- திருவண்ணாமலை.

19 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கலப்பு அணிக்கான போட்டி 

முதல் பரிசு- ராணிப்பேட்டை¸ இரண்டாவது பரிசு- திருவண்ணாமலை¸ மூன்றாவது பரிசு- சென்னை.

கயிறு இழுக்கும் போட்டி-திருவண்ணாமலை அபார வெற்றி
கயிறு இழுக்கும் போட்டி-திருவண்ணாமலை அபார வெற்றி

பரிசளிப்பு விழாவுக்கு வந்தவர்களை சங்கத்தின் இணை செயலாளர் ஜெ.சதீஷ்குமார் வரவேற்றார். பொதுச் செயலாளர் கே.பிச்சையப்பன்¸ பொருளாளர் வி.மேகநாதன்¸ துணைத் தலைவர் எஸ்.பி.சோமசுந்தர்¸ தொழில் நுட்ப குழுவைச் சேர்ந்த ஆர்.முனிரத்தினம் ஆகியோர் பேசினார்கள். சங்கத்தின் மாவட்டத் தலைவர் கார்த்தி வேல்மாறன் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளையும்¸ சான்றிதழ்களையும் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன்¸ செயலாளர் ஏ.சிவக்குமார்¸ உடற்கல்வி இயக்குநர் பி.சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியவர்கள் மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!