Homeசுகாதாரம்வழியை அடைத்தால்..எச்சரிக்கை செய்த வேங்கிக்கால் ஏரி

வழியை அடைத்தால்..எச்சரிக்கை செய்த வேங்கிக்கால் ஏரி

வழியை அடைத்தால்..எச்சரிக்கை செய்த வேங்கிக்கால் ஏரி

திருவண்ணாமலையில் வேங்கிக்கால்¸ சேரியந்தல் ஏரிகள் நிரம்பி ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி 1000க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். 

திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. திருவண்ணாமலை சுற்றுப்புறங்களில் உள்ள வேங்கிக்கால்¸ சேரியந்தல்¸ நொச்சிமலை¸கீழ்நாத்தூர் ஆகிய ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 

இந்நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நேற்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை செங்கத்தில் 33.40 மில்லி மீட்டரும்¸ போளுரில் 40.60 மீட்டரும்¸ திருவண்ணாமலையில் 33 மில்லி மீட்டரும்¸ தண்டராம்பட்டில் 15 மில்லி மீட்டரும்¸  கலசப்பாக்கத்தில் 22 மில்லி மீட்டரும்¸ கீழ்பென்னாத்தூரில் 3 மில்லி மீட்டரும்¸ ஜமுனாமரத்தூரில் 2 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. 

வழியை அடைத்தால்..எச்சரிக்கை செய்த வேங்கிக்கால் ஏரி

திருவண்ணாமலை பகுதிகளில் விடிய¸விடிய பெய்த கன மழையால் ஏற்கனவே நிரம்பி இருந்த ஏரிகளில் இருந்த தண்ணீர் ஆக்ரோஷமாக வெளியேறியது. கால்வாய் அடைப்பு காரணமாக இந்த தண்ணீர் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொண்டது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் தூக்கத்திலிருந்து மக்கள் அதிர்ச்சியுடன் எழுந்தனர். எப்போதும் இல்லாத அளவு வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததை பார்த்து ஏரி உடைந்து விட்டதோ என பீதி அடைந்து மாடி மீது தஞ்சம் அடைந்தனர். அத்தியாவசிய பொருட்களான பால் தண்ணீர் உள்ளிட்டவை வாங்க கூட வெளியில் செல்ல முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

வழியை அடைத்தால்..எச்சரிக்கை செய்த வேங்கிக்கால் ஏரி
வழியை அடைத்தால்..எச்சரிக்கை செய்த வேங்கிக்கால் ஏரி

வழியை அடைத்தால்..எச்சரிக்கை செய்த வேங்கிக்கால் ஏரி

குறிஞ்சி நகர்¸ கிருஷ்ணா நகர்¸ மகாலட்சுமி நகர் பொன்னுசாமி நகர்¸ அவலூர்பேட்டை சாலையிலுள்ள கிருஷ்ணா நகர்¸ ஐயப்பன் நகர்¸ சேரியந்தல்¸ நொச்சி மலைப்பகுதி குடியிருப்புகள் என திருவண்ணாமலை நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். வீட்டுக்குள்ளேயே பொதுமக்கள் முடங்கியதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சேரியந்தல் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களில் மழைநீர் புகுந்தது. 

வேலூர் செல்லும் சாலை¸ அவலூர்பேட்டை செல்லும் சாலை ஆகியவை வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அந்த பகுதிகள் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. வெள்ளத்தில் மூழ்கியபடி ஓட்டிச் செல்லப்பட்டதால் பல வாகனங்கள் பழுதாகி பாதி வழியிலேயே நின்று விட்டது. பஸ்¸லாரி உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் நீரில் ஊர்ந்து சென்றன. 

எப்போதும் இல்லாத அளவு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஓடிய தண்ணீரில் பலர் மீன் பிடித்தனர். இதைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம்¸ நெடுஞ்சாலைத்துறை¸ பொதுப்பணித்துறை முடுக்கி விடப்பட்டு ஏரி நீர் ரோடுகளில் ஓடாமல் இருக்க கால்வாய்களை தூர் வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. பவன் குமார் ரெட்டி¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் மு. பிரதாப்¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா மற்றும் பொதுப்பணித்துறை¸ நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். 

வேங்கிக்கால் ஏரி 64 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். திருவண்ணாமலை அருகே உள்ள இரும்பு தாது உள்ள கவுத்திமலையிருந்து வெளியேறும் மழை நீர் ஆடையூர் ஏரிக்கு வந்து நிரம்பி அந்த நீர் வேங்கிக்காலை வந்தடைகிறது. மேலும் திருவண்ணாமலை மலையிலிருந்து வரும் மழை நீரும் இந்த ஏரியை சென்று அடையும் வண்ணம் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடைகள் அனைத்தும் தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளன. இதே போல் வேங்கிக்கால் ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர் 1500 மீட்டர் தூரம் உள்ள சேரியந்தல் ஏரியை சென்றடையும் வண்ணம் இருந்த ஓடைகளும் பிளாட்டுகளாக மாறி விட்டன. 

பார்க்க…

https://www.agnimurasu.com/2020/12/blog-post_9.html

இந்நிலையில் கால்வாய் தூர் வாரும் பணிகளை சிறிது தினங்களுக்கு முன்பு நேரில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு¸ வேங்கிக்கால் ஏரி தண்ணீரை மாற்று பாதை அமைத்து அதன் வழியாக சேரியந்தல் ஏரிக்கு கொண்டு செல்லும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி புதியதாக 10 அடி அகலத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.

பார்க்க…

வேங்கிக்காலை பற்றிய முந்தைய செய்தி…

https://www.agnimurasu.com/2020/09/blog-post_20.html

இந்த கால்வாய் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் வழியாகவும்¸ துர்க்கா நகர் வழியாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேலை பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. நேற்று பெய்த மழையினால் அந்த கால்வாய் நிரம்பி குடியிருப்புகளிலும்¸ வயல்களிலும் தண்ணீர் புகுந்தது. 

வேங்கிக்கால் ஏரி தண்ணீரை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியினால் மறைந்து போன பழைய ஓடையின் வழியாக செல்லும் வகையில் செய்தால் மட்டுமே குடியிருப்புகளை வெள்ளம் சூழாது. குறிப்பாக துர்க்கா நகரில் 4 பிளாட்டுகளின் வழியாக ஓடை செல்கிறது. இந்த ஓடை மூடப்பட்டு விட்டதால் இன்றைக்கு அந்த நகரே வெள்ளத்தில் மிதக்கிறது. 

ஓடைகளை பிளாட்டுகளாக மாற்றியவர்கள் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள். இதனால் இந்த ஓடையை மீட்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் ஹிமாலயா ஓட்டல் பக்கத்தில் இருக்கும் வீடுகள்¸ கடைகள் அனைத்தும் ஓடையின் மீது கட்டப்பட்டதாகும். இப்படி ஓடைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் ரோடுகளில் ஓடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இனிமேலாவது என் வழியை அடைக்காமல் திறந்து விடுங்கள்¸ என சொல்லாமல் சொல்லியிருக்கிறது வேங்கிக்கால் ஏரி என்கின்றனர் பொதுமக்கள். 

சண்முகா பள்ளி

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனைக்கும்¸   திருவண்ணாமலை சண்முகா அரசு மேனிலைப்பள்ளிக்கும் இடையே கட்டப்பட்டு வரும் மிகப் பெரிய கால்வாய் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டதால் கழிவுநீர் அந்த  பள்ளிக்குள் நுழைந்து வகுப்பறைகளுக்குள் புகுந்து விட்டது.

மாணவர்களின் உடல் நலம் கெடும் என்பதால் இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தீர்வு காண வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

See also  கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலை

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!