Homeஅரசு அறிவிப்புகள்குவைத் நாட்டில் 500 பெண்களுக்கு வேலைவாய்ப்பு

குவைத் நாட்டில் 500 பெண்களுக்கு வேலைவாய்ப்பு

குவைத் நாட்டில் 500 பெண்களுக்கு வேலைவாய்ப்பு

குவைத் நாட்டில் வீட்டு வேலை பணியாளராக பணிபுரிய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸

தமிழக முதல்வர் அறிவுரைப்படியும்¸ தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வழிகாட்டுதல் படியும்¸ வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழக மக்களுக்கு உடனடியாக அயல் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

குவைத் நாட்டில் வீட்டு வேலை பணியாளராக பணிபுரிவதற்கு (Housemaid) 30 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட பெண் பணியாளர்கள் 500 நபர்கள் தேவைப்படுவதால் குவைத் நாட்டின் Kuwait Gate Foundation என்ற நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 17-11-2021 அன்று வீட்டுப்பெண் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஒப்பந்த விவரம் வருமாறு¸

வீட்டு பெண் பணியாளர்களாக அரபு நாடுகளில் பணிபுரிந்து அனுபவமுள்ளவர்களுக்கு மாத ஊதியம் ரூ.32¸000/- மற்றும் அனுபவம் இல்லாதவர்களுக்கு மாத ஊதியம் ரூ.29¸500/- வழங்கப்படும்.

வயது வரம்பு 30 முதல் 40 வரை.

மேலும் மருத்துவ பரிசோதனை கட்டணம்¸ விசா¸ விமான பயணச்சீட்டு¸ உணவு¸ இருப்பிடம்¸ மருத்துவம்¸ காப்புறுதி மற்றும் இதர சலுகைகள் குவைத் நாட்டின் சட்ட விதிகளுக்குட்பட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

மாத சம்பளம் தவறாமல் வழங்க வேண்டும்.

இந்த ஒப்பந்தம் இரண்டு வருடம் வரை நீடிக்கும்¸ ரத்து செய்யாத பட்டசத்தில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படும்.

குவைத் நாட்டின் கலாச்சாரப் பண்புகள் குறித்த கையேடு பணியாளர்களுக்கு அவர்களின் தாய் மொழியில் வழங்க வேண்டும்.

பணிபுரியும் இடத்தில் பணியாளருக்கு ஏதுவான சூழ்நிலை உருவாக்கி கொடுக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணியில் சேர விருப்பமுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்தவர்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் இதர விவரங்கள் அறிய¸ சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தையோ அல்லது திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தையோ அணுகலாம்.

மேலும் குவைத் நாட்டில் வீட்டு பெண் பணியாளராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுயவிவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட வேலைக்கான விவரங்களை இந்நிறுவனத்தின் வலைதளம் https://www.omcmanpower.com/ மூலமாகவும் இந்நிறுவன தொலைபேசி எண்கள் 044-22505886/ 044-22500417 மூலமாகவும் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது 17.11.2023 வரை நடைமுறையில் இருக்குமென்பதால் விருப்பமுள்ள மனுதாரர்கள் இக்காலகட்டத்திற்குள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும்¸ முதலில் பதிவு செய்யும் நபர்களுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்படும்.

இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் எண்.RC.No.B-0821/CHENNAI/CORPN/1000+5/308/84 ஆகும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

See also  அறநிலையத்துறை சார்பில் கலசப்பாக்கத்தில் கல்லூரி

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!