Homeஆன்மீகம்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது 

முக்தியை கொடுக்கும் தலம்

பிறந்தால் முக்தி திருவாரூரில்¸ இறந்தால் முக்தி காசியில்¸ நினைத்தாலே முக்தி திருவண்ணாமலையில். அக்னியிலிருந்துதான் அனைத்தும் தொடங்கியது. அக்னியின் தலைவன் அண்ணாமலையானே. பக்தியில் ஒன்றி கருத்தில் ஊன்றி நினைக்கையில் முக்தியை கொடுக்கும் இத்தலத்தில் 3 பாகங்களாக அமைந்திருக்கும் அண்ணாமலையாரின் லிங்கம்¸ ஒரு பாகம் விஷ்ணு பீடமாகவும்¸ ஒரு பாகம் பிரம்ம பீடமாகவும்¸ இன்னொரு பாகம் சக்தி பீடமாகவும் அமைந்திருப்பதால் அண்ணாமலையாரை வணங்கினாலே மூவரையும் வணங்கிய பலன் கிடைக்கும். 

காவல் தெய்வ வழிபாடு

இப்படி சிறப்பு வாய்ந்த அண்ணாமலையார் கோயிலில் 365 நாட்களில் 89 நாட்கள் விழாக்கள் நடத்தப்படுகிறது. அதில் வேறெங்கும் காணமுடியாத வருடந்தோறும் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா இந்த வருடம் இன்று(10-11-2021) கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக 3 நாட்கள் எல்லை காவல் தெய்வ வழிபாடு நடைபெற்றது. முதல் நாள் துர்க்கையம்மன் உற்சவமும் 2ம் நாள் பிடாரிஅம்மன் உற்சவமும்¸ 3ம் நாளான நேற்று இரவு விநாயகர் உற்சவமும் நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து தீபத்திருவிழா தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்றது.

கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

எழுந்தருளிய பஞ்சமூர்த்திகள் 

இதையொட்டி கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டது. பிறகு அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு தீபாரானை நடந்தது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார்- உண்ணாமலையம்மன் யதா ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆனந்த நடனமாடி தங்க கொடிமரத்தின் முன்பு தோன்றினார். இதே போல் விநாயகர்¸ முருகர்¸ சண்டிகேசுவரரும் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அங்கு பஞ்சமூர்த்திகளுக்கு பஞ்சகலை எனும் தீபாராதனை காட்டப்பட்டது. 

கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

அண்ணாமலையாருக்கு அரோகரா

அதன் பிறகு வேத ஆகம மந்திரங்கள் முழங்க விருச்சிக லக்னத்தில் காலை 6-56 மணிக்கு  மணியளவில் 72 அடி உயர தங்க கொடிமரத்தில் சுவாமிநாத சிவாச்சாரியார் கொடியேற்றினார். அப்போது கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என பக்தி முழக்கமிட்டனர். பிறகு கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தீப திருவிழாவையொட்டி கோயிலில் உள்ள சாமிகளுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. 

கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பக்தர்களிடம் கெடுபிடி

விழாவில் துணை சபாநாயகர் பிச்சாண்டி¸ கலெக்டர் முருகேஷ்¸ மாவட்ட வருவாய் அதிகாரி முத்துக்குமாரசாமி¸ கோயில் இணை ஆணையாளர் அசோக்குமார்¸ முன்னாள் நகரமன்றத் தலைவர் ஸ்ரீதர்¸ நகர திமுக செயலாளர் கார்த்தி வேல்மாறன்¸ இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என மாவட்ட நிர்வாகம் கூறியிருந்த நிலையில் கொடியேற்ற நிகழ்ச்சி ஆரம்பம் ஆன நேரத்தில் பக்தர்களை கோயிலுக்கு அனுப்பாமல் ஊழியர்கள் கெடுபிடி காட்டினர். கட்டளைதாரர்கள்¸ உபயதாரர்கள் கோயிலுக்கு வந்த போது அவர்களுடனே பக்தர்களும் உள்ளே நுழைந்தனர். இதனால் கொடியேற்றம் நிகழ்ச்சியை காண 500க்கும் மேற்பட்டோர் கோயிலுக்குள் திரண்டிருந்தனர்.  

பாமர மக்களுக்கு இயலாத காரியம்

அனைத்து உயிரினங்களும் இன்புற்று வாழ தீபத்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றிருப்பதாக சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர். கொடியேற்றத்தை காண வந்திருந்த மதுரைச் சேர்ந்த பெண் பக்தர் மகேஸ்வரி கூறுகையில் கோயிலுக்குள் 50லிருந்து 60 பேரை மட்டும்தான் அனுமதித்தனர். கடவுள் அருளாhல் என்னால் உள்ளே வர முடிந்தது. பக்தர்கள் வந்தால்தான் சாமி சந்தோஷப்படும். எனவே தீபதிருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்றார். சிவ பக்தர் மணிகண்டன் கூறுகையில் தீபதிருவிழா நாளில் பொதுமக்கள் கோயில் உள்ளே சென்று வணங்கி வழிபட ஆன்லைன் பதிவு என்பது படிக்காத பாமர மக்களுக்கு இயலாத காரியம் என்பதை தமிழக அரசு உணர்ந்து தீபதிருநாளில் மட்டும் பொதுமக்கள் அனுமதியை தவிர்த்து மற்ற நாட்களில் சாதாராணமாக  சென்று வழிபட அனுமதிக்க வேண்டும். இல்லை யென்றால் வரும் பொதுமக்களுக்கு கோயில்களிலேயே இலவச அனுமதி சீட்டு தினமும் வழங்க வேண்டும். இதே போல் அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழா உற்சவ மூர்த்திகள் ஐந்தாம் பிரகாரத்தில் வரும் பொழுது பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்றார். 

கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

19ந் தேதி மகாதீபம் 

இன்று முதல் தினமும் காலை வினாயகர்¸ சந்திரசேகரர் உற்சவம். இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடக்கிறது. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தினமும் அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் காலையும்¸ இரவும் சாமி ஊர்வலங்கள் நடக்கிறது. 19.11.2021 வெள்ளிக்கிழமை 10-ம் நாள் திருவிழா விடியற்காலை 4 மணிக்கு கோயில் கருவறைக்குள் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு வருடத்துக்கு ஒரு முறை காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் காட்சியளிக்க 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் தடை

17ந் தேதி முதல் 20ந் தேதி வரை திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கும்¸ கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தீபத் திருவிழா நிகழ்ச்சிகள்¸ தொலைக்காட்சிகள்¸ உள்ளுர் கேபிள் டிவிக்கள்¸ திருக்கோயில் நிர்வாகம் மூலம் யூ டியூப் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

See also  திருவண்ணாமலை கோயிலில் லட்சதீபம் ஏற்ற தடை

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!