Homeசெய்திகள்செங்கம்: பயங்கர சத்தத்துடன் மலை சரிந்து விழுந்தது

செங்கம்: பயங்கர சத்தத்துடன் மலை சரிந்து விழுந்தது

செங்கம்: பயங்கர சத்தத்துடன் மலை சரிந்து விழுந்தது

செங்கம் அருகே கன மழையால் பயங்கர சத்தத்துடன் மலை சரிந்து ரோட்டில் விழுந்தது. குப்பநத்தம் கிராமம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

செய்யாற்றில் 54 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் உருவாகும் செய்யாறு¸ செங்கம் வழியாக ஓடி  பல்வேறு நதிகளுடன் இணைந்து மாவட்டத்தின் கடைசியில் செய்யாறு ஊருக்கு சென்று பாலாறு நதியுடன் இணைந்து காஞ்சிபுரம் பகுதியில் கடலில் கலக்கிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 11ந் தேதி செங்கம்¸ கலசப்பாக்கம்¸ ஜவ்வாதுமலை பகுதிகளில் கன மழை பெய்தது. அதிகப்பட்சமாக கலசப்பாக்கத்தில் 101.50 மில்லி மீட்டரும். ஜமுனாமரத்தூரில் 78.50 மில்லி மீட்டரும். செங்கத்தில் 57.40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியது. மேலும் தொடர்ச்சியாகவும் மழை கொட்டியது.

இந்நிலையில் நேற்று இரவும் ஜவ்வாது மலைத் தொடரில் கன மழை பெய்தது. செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணைக்கட்டில் 131.40 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் குப்பநத்தம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. விநாடிக்கு 2000கன அடி தண்ணீர் வந்தது. அணையின் பாதுகாப்பை கருதி அந்த 2000கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது. இதனால் செய்யாற்றில் 1967ம் ஆண்டிற்கு பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

செங்கம்: பயங்கர சத்தத்துடன் மலை சரிந்து விழுந்தது

குப்பநத்தம் அணை எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படும் என்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் அணை திறக்கப்பட்டதால் செய்யாறில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் வீடுகளுக்கு புகுந்தது.

See also  2 மடங்கு பணம் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி

தளவநாயக்கன் பேட்டை¸ காயிதே மில்லத் தெருவில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் மொட்டை மாடியில் சிக்கி தவித்த யசேன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை தீயணைப்புத்துறையினர் கயிறு¸ ஏணி மூலம் மீட்டனர். இதே போல் 20 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜமுனாமரத்தூர் மலை தொடரில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழையினால் உருவான காட்டாற்று வெள்ளத்தாலும்¸ குறுகிய நேரத்தில் குப்பநத்தம் அணை பகுதிகளில் 131மில்லி மீட்டர் மழை பெய்ததாலும் அந்த அணையின் அருகில் உள்ள மலை ஒன்று இன்று (14-11-2021) அதிகாலை பயங்கர சத்தத்துடன் சரிந்து ரோட்டில் விழுந்தது. பாறைகள்¸ கற்கள்¸ மரங்கள் அடியோடு சரிந்து ரோட்டில் உருண்டு சென்றன.

செங்கம்: பயங்கர சத்தத்துடன் மலை சரிந்து விழுந்தது
செங்கம்: பயங்கர சத்தத்துடன் மலை சரிந்து விழுந்தது
செங்கம்: பயங்கர சத்தத்துடன் மலை சரிந்து விழுந்தது

சத்தத்தை கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடோடி வந்த பார்த்த போது அந்த மலை இருந்த தடமே இல்லாமல் சரிந்து கிடந்ததை அதிர்ச்சியுடன் பார்த்தனர். மண் சரிவை கேள்விப்பட்டிருக்கிறோம்¸ மலை சரிந்ததை இப்போதுதான் நேரில் பார்த்திருக்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

See also  வியாபாரிகளுடன் திரண்ட பிச்சாண்டி எம்.எல்.ஏ ---ஆணுறை¸ செத்த எலியுடன் வந்த விவசாயிகள்

மலை சரிந்ததால் கல்லாத்தூர் முதல் துரிஞ்சிகுப்பம் வரையிலான சாலை துண்டிக்கப்பட்டது. மேலும் குப்பநத்தம் அணையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் கிளையூர் ஸ்ரீதாழை மடுவு காளியம்மன் கோயிலில் வெள்ளம் சூழ்ந்தது. மேம்பாலம் மூழ்கியது. குப்பநத்தம் கிராமத்திலும் வெள்ளம் புகுந்து வீடுகளை சூழ்ந்தது. இந்த பயங்கர வெள்ளத்தினால் ஆடு¸ மாடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

செங்கம்: பயங்கர சத்தத்துடன் மலை சரிந்து விழுந்தது

போளுரிலிருந்து ஜமுனாமரத்தூர் சாலையில் உள்ள 5-வது கொண்டை ஊசி வளைவில் பலத்த மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் போளுர் டி.எஸ்.பி. அறிவழகன் தலைமையில் போலீசார்¸ தீயணைப்பு துறையினருடன் விரைந்து சென்று மண்சரிவை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். அவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமார் பாராட்டு தெரிவித்தார்.

செங்கம்: பயங்கர சத்தத்துடன் மலை சரிந்து விழுந்தது
செங்கம்: பயங்கர சத்தத்துடன் மலை சரிந்து விழுந்தது

பலத்த மழையினால் திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையத்தில் 80 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. விஷ ஜந்துகளும் தண்ணீரோடு சேர்ந்து வீடுகளில் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பிறகு திருவண்ணாமலை-தண்டராம்பட்டு ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி இனிமேல் குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வராமல் தடுப்பதாக கூறியதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!