Homeஅரசு அறிவிப்புகள்தீபத்திருவிழா- புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் வெளியிட்டார்

தீபத்திருவிழா- புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் வெளியிட்டார்

தீபத்திருவிழா- புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் வெளியிட்டார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற உள்ள கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் அறிவித்துள்ளார். 

அதன்படி சாமி தரிசனம் செய்ய முதலில் அறிவித்த 10 ஆயிரம் பக்தர்களுக்கு பதில் 13 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். வெளியூர் பக்தர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். உள்ளுர் பக்தர்களுக்கு அரசு அலுவலகங்களில் நுழைவு சீட்டு வழங்கப்படும். அன்னதானம் வழங்க தடை விதிக்கப்படும். சிறப்பு பஸ்¸ சிறப்பு ரயில் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் 2021ம் ஆண்டிற்கான தீபத்திருவிழா 07.11.2021 அன்று அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவத்தில் தொடங்கி 23.11.2021 அன்று அருள்மிகு சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி உலா வரை 17 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நடந்தவாறு சில கூடுதல் தளர்வுகளுடன் 2021 ஆம் ஆண்டு தீபத்திருவிழாவினை அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பின்வரும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட உள்ளது.

அதன்படி தீபத்திருவிழா நடைபெற உள்ள 07.11.2021 முதல் 23.11.2021 வரை தீபத்திருநாள் மற்றும் பௌர்ணமி நாட்களான 17.11.2021 பிற்பகல் 01.00 மணி முதல் 20.11.2021 வரை உள்ள நாட்கள் தவிர்த்து இதர நாட்களில் தினந்தோறும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த 3¸000 உள்ளுர் பக்தர்கள் மற்றும் வெளி மாவட்டம்¸ வெளி மாநிலங்களை சார்ந்த 10¸000 பக்தர்கள் என மொத்தம் 13¸000 பக்தர்கள் என்ற அளவில் கட்டணமில்லாமல் அரசால் தெரிவிக்கப்பட்ட கோவிட் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்திட அனுமதிக்கப்படுவார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த 3¸000 உள்ளூர் பக்தர்களுக்கான அனுமதி சீட்டுகள் சிறப்பு மையங்கள் மூலம் நேரடியாக அளிக்கப்படும். வெளி மாவட்டம்¸ வெளி மாநில பக்தர்கள் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்திட திருக்கோயில் இணையதளமான http://www.arunachaleswarartemple.tnhrce.in/   ல் முன்பதிவு செய்து ஒரு நபருக்கு ஒரு நுழைவு சீட்டு என்ற முறையில் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து கொண்டு அதனடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள்.

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பணி தொடர்பான சுவாமி பல்லக்கு தூக்கும் பணியாளர்கள்¸ கோவில் பிரகாரம் பணி தொடர்பான ஊழியர்கள்¸ திருக்கோயில் ஒப்பந்த பணியாளர்கள்¸ திருவிழா ஒப்பந்ததாரர்கள்¸ சிவாச்சாரியார்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தால் உரிய அடையாள அட்டை அளிக்கப்பட்டு திருக்கோயிலின் உள்ளே சென்று பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த ஆண்டு அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் சார்ந்த கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் தீபத் திருவிழா நாட்களில் திருக்கோயில் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படாத நிலையில்¸ இந்த ஆண்டு அனுமதிக்கப்படுவார்கள். 

07.11.2011 முதல் துவங்கும் தீபதிருவிழா நாட்களில் திருக்கோயிலின் வெளிபுறத்தில் உள்ள வீதியில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த சுவாமிகள் திருவீதி உலா கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் திருக்கோயில் வளாகத்திற்குள் ஆகம விதிகளின்படி நடைபெறும். 16.11.2021 அன்று கோவில் வளாகத்தின் வெளியே உள்ளே மாடவீதிகளில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த அருள்மிகு அண்ணாமலையார் மகா ரத தேரோட்டம் உள்ளிட்ட 5 தேரோட்ட நிகழ்வினையும் கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் திருக்கோயில் வளாகத்தின் உள்ளேயே ஐந்தாம் பிராகாரத்தில் ஆகம விதிகளின்படி நடைபெறும்.

தீபத்திருவிழா- புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் வெளியிட்டார்

17.11.2021 பிற்பகல் 01.00 மணி முதல் 20.11.2021 முடிய பொதுமக்கள்¸ பக்தர்கள் மற்றும் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என எவரும் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். பௌர்ணமி மற்றும் தீபத்திருவிழா நாட்களான 17.11.2021 பிற்பகல் 01.00 மணி முதல் 20.11.2021 வரை கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

தீபத்திருநாளான 19.11.2021 மற்றும் அதனை தொடர்ந்து வரும் 10 நாட்கள் அண்ணாமலையார் மீது ஏறி மகாதீபத்தினை தரிசனம் செய்ய பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. திருவண்ணாமலை நகரம் மற்றும் நகரினை சுற்றியுள்ள பொதுமக்கள் 19.11.2021 நடைபெறும் தீபத்திருவிழாவினை வீடுகளிலிருந்தே அண்ணாமலையார் மலை உச்சியின் மீது ஏற்றப்படும் மகா தீபத்தினை தரிசனம் செய்திடுமாறும்¸ பொதுமக்கள் நகர் மற்றும் கிரிவலப் பாதையில் எந்தவொரு பகுதியிலும் தேவையின்றி கூடாமாலும்¸ கூட்ட நெரிசல் ஏற்படுத்தாமலும் தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு பக்தர்கள்¸ பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருவண்ணாமலை நகரம்¸ அய்யங்குளத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த தெப்பல் திருவிழா கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகத்தினுள் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தத்தில் ஆகம விதிகளின்படி 20.11.2020 முதல் 22.11.2021 வரை நடைபெறும். திருக்கார்த்திகை தீபம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும்¸ யூ டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலை தளங்கள்¸ திருக்கோயில் இணைய தளம்¸ அரசு கேபிள் தொலைக்காட்சி மற்றும் உள்ளுர் உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகள் மூலமாகவும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

தீபத்திருவிழா நாட்களான 07.11.2021 முதல் 23.11.2021 வரை திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்படுகிறது. தீபத்திருவிழா நாட்களில் கூடுதல் சிறப்பு பேருந்து¸ சிறப்பு ரயில் வசதி கிடையாது. செங்கம் ரோடு கிரிவலப் பாதை மற்றும் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே உள்ள அரசு புறம்போக்கு காலி மைதானத்தில் வருடந்தோறும் நடைபெறும் மாடு மற்றும் குதிரை சந்தை கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் நடத்த அனுமதி கிடையாது.

வெளி மாவட்டம்¸ வெளி மாநிலங்களை சார்ந்த பக்தர்கள் மட்டுமன்றி திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்தவர்களும் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்திட திருக்கோயில் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த இணைய தள முன்பதிவு 06.11.2021 முதல் துவங்கும்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த உள்ளுர் பக்தர்களுக்கு ஒரு நபருக்கு ஒரு அனுமதி சீட்டு என்பதன் அடிப்படையில் பின்வரும் 4 இடங்களில் 07.11.2021 மற்றும் 08.11.2021 ஆகிய 2 நாட்கள் மட்டும் காலை 10.00 முதல் மாலை 05.00 மணி வரை அனுமதி சீட்டு அளிக்கப்படும்.

1. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்¸ திருவண்ணாமலை

2. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்¸ திருவண்ணாமலை

3. நகராட்சி அலுவலகம்¸ திருவண்ணாமலை

4. இந்து சமய அறநிலையத் துறை ணை ஆணையர் அலுவலகம்¸ காந்தி

நகர்¸ திருவண்ணாமலை.

இந்த அனுமதி சீட்டினை பயன்படுத்தி 17.11.2021 பிற்பகல் 01.00 மணி முதல் 20.11.2021 முடிய அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். 10.11.2021 மற்றும் 16.11.2021 ஆகிய 2 தினங்கள் மட்டும் காலை 09.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை திருக்கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும். இதர நாட்களில் தினசரி காலை 06.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை திருக்கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும்.

நிபந்தனைகள் :

பக்தர்கள் அடையாள அட்டை பெற ஆதார் அடையாள அட்டை அவசியமானது.

திருக்கோயில் வளாகத்திற்குள் வரும் போது அனுமதி சீட்டு மற்றும் ஆதார்

அடையாள அட்டை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும்.

அனுமதி சீட்டு மற்றும் ஆதார் அடையாள அட்டை விவரம் திருக்கோயில்

வளாகத்திற்குள் எந்த நேரத்திலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

ஒருவருக்கு அளிக்கப்பட்ட அனுமதி சீட்டினை வேறு ஒருவர் பயன்படுத்தி

திருக்கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் அதே நேரத்தில் பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கையும் பாதிக்கப்படாத வகையில் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆண்டு தீபத்திருவிழாவினை சிறப்பாக நடத்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தெரிவித்துள்ளார். 

See also  அரசு குழந்தைகள் இல்லத்தில் வேலை வாய்ப்பு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!