Homeசெய்திகள்ஜவ்வாதுமலை கிராமங்களை துண்டாக்கும் கூட்டாறு

ஜவ்வாதுமலை கிராமங்களை துண்டாக்கும் கூட்டாறு

ஜவ்வாதுமலை கிராமங்களை துண்டாக்கும் கூட்டாறு

செங்கம் அருகே 4 ஆறுகள்¸ காட்டாறு கலக்கும் கூட்டாற்றில் மேம்பாலம் இல்லாததால் உயிரை கையில் பிடித்துக் கொண்டு மலைவாழ் மக்கள் தரைப்பாலத்தில் செல்கின்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உருவாகும் காட்டாறு சமீபத்தில் பல பகுதிகளை சின்னாபின்னமாக்கியது. ஒரு மலையையே பெயர்த்து தவிடு பொடியாக்கி விட்டது. 

ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம் ¸நம்மியம்பட்டு¸ வீரப்பனூர்¸ கோவிலூர்¸ குட்டக்கரை¸ கானமலை¸பலா மரத்தூர்¸ மேல் சிலம்படி ¸புலியூர்¸ தென்மலை அத்திப்பட்டு¸ கல்லாத்தூர் ¸ஊர் கவுண்டனூர் ஆகிய 11ஊராட்சிகளை உள்ளடக்கியதாகும். இவ் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். பலா மரத்தூர் ¸மேல் சிலம்படி¸ புலியூர்¸ தென்மலை அத்திப்பட்டு ஊராட்சிகள் ஜமுனாமரத்தூர் வட்டத்தை உள்ளடக்கியதாகும். கல்லாத்தூர்¸ ஊர் கவுண்டனூர் ஊராட்சிகள் செங்கம் வட்டத்தில் உள்ளது. 

ஜமுனாமரத்தூர் மற்றும் செங்கம் வட்டத்திற்குட்பட்ட 6 ஊராட்சிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் ஜமுனா மரத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம்¸ கல்வி நிலையங்கள்¸ மருத்துவமனைகள்¸ சார்பதிவாளர் அலுவலகம்¸ காவல் நிலையம்¸ பீமன் நீர்வீழ்ச்சி¸ கோலப்பன் ஏரி¸ காவலூரில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் அமிர்தியில் உள்ள வனவியல் பூங்கா ஆகியவற்றுக்கு செல்லவும்¸ வேளாண் இடுபொருட்களை வாங்கவும் ஜமுனா மரத்தூர் முதல் பலா மரத்தூர்¸ கீழ் விளா மூச்சி ¸புலியூர் ¸மேல்பட்டு வழியாக செங்கம்- திருவண்ணாமலை செல்லும் சாலையை தான் பயன்படுத்த வேண்டும். 

இச் சாலையின் குறுக்கே கூட்டத்தூர் கிராமத்தின் அருகில் அடப்ப மூட்டு ஆறு¸ மோட்டு கொள்ளை ஆறு ¸மேல் விளா மூச்சி ஆறு¸ சின்ன கூத்தனேரி ஆறு உள்ளிட்ட கிளை ஆறுகள் தான் செய்யாற்றின் துவக்கமாக விளங்குகிறது. இக்கிளை ஆறுகள் கூட்டாத்தூர் கிராமத்திற்கு அருகில் உள்ள கூட்டாற்றில் ஒன்றாக கலந்து கூட்டாறு வழியாகத்தான் காட்டாற்று வெள்ளம் கோயில் கொள்ளை¸ பன்டிரேவ்¸ ஊர் கவுண்டனூர்¸ கிளையூர்¸ கல்லாத்தூர் கிராமங்களின் வழியாக செல்லும் செய்யாற்றில் சங்கமிக்கிறது . இந்த ஆற்றின் குறுக்கே தான் கல்லாத்தூர் ஊராட்சி துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் குப்பநத்தம் அணையும் கட்டப்பட்டுள்ளது.

ஜவ்வாதுமலை கிராமங்களை துண்டாக்கும் கூட்டாறு

ஜவ்வாதுமலை கிராமங்களை துண்டாக்கும் கூட்டாறு

தினமும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் உள்பட சுமார் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கூட்டாற்றின் மேல் உள்ள தரைப்பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். இச்சாலை செங்கம் பரமனந்தல் முதல் ஜமுனாமரத்தூர்¸ வீரப்பனூர் ¸நம்மியம்பட்டு ¸அமிர்தி சாலையில் இணைக்கும் சாலை ஆகும் . தகவல் தொடர்பு அளிக்கும் உயர் கோபுர வசதி இல்லாத இப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டால் அடுத்தவர்களுக்கு தகவல் சொல்ல முடியாத நிலை உள்ளது. 

பன்டிரேவ்¸ ஊர் கவுண்டனூர்¸ கிளையூர் கல்லாத்தூர் உள்ளிட்ட மக்கள் குப்பநத்தம்¸ பரமனந்தல் வழியாக மேல்பட்டு¸ புலியூர்¸ கூட்டாற்றைக் கடந்து தான் ஜமுனாமரத்தூர் செல்லவேண்டும். இப்பகுதியில் ஒரு உயர் நிலைப்பள்ளி¸ 3 நடுநிலைப்பள்ளி¸ 13 துவக்கப் பள்ளி¸ 8 நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும்¸ அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்¸ ஊழியர்களும்¸ ஜமுனாமரத்தூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் கடன் பெறுவதற்கும்¸ வட்டார வளர்ச்சி அலுவலகம்¸  வட்டாட்சியர் அலுவலகம்¸ காவல் நிலையம் செல்பவர்களும் இவ்வழியாகத்தான் செல்ல வேண்டும். 

இந்நிலையில் மழையின் போது அந்த தரைப்பாலத்திற்கு மேல் வெள்ளம் ஓடுவதால் எவ்விதமான தடுப்பு சுவர்களும்¸ பாதுகாப்பு அம்சங்களும் இல்லாததால் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அந்த வழியாக செல்லும் நிலை உள்ளது. பஸ் போன்ற வாகனங்கள் செல்வதும் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. 

மலைப்பகுதி என்பதால் எப்போது மழை வரும்? எந்த நேரத்தில் வெள்ளம் வரும்? மலையையே பெயர்த்து போட்ட காட்டாறு வெள்ளம் மீண்டும் வந்து விடுமோ? என்ற பயத்தில் அப்பகுதியில் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் உள்ளடக்கிய பலா மரத்தூர் ¸புலியூர்¸ கல்லாத்தூர்¸ ஊர் கவுண்டனூர் உள்ளிட்ட ஆறு ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் நேரடியாகப் பயன்படுத்தும் நிலையில் உள்ள இச் சாலை மீது குறுக்கிடும் கூட்டாற்றின் மீது அரசு உடனடியாக மேம் பாலம் கட்டித் தந்து மலைவாழ் மக்களின் துயரத்தை போக்க வேண்டும் என மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

See also  முதியவரை தாக்கி பணம்-நகை கொள்ளை

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!