சாத்தனூர் அணையில் 50ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் சாத்தனூர் அணையிலும் தண்ணீர் புகுந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையிலிருந்து விநாடிக்கு 50 ஆயிரத்து 945 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சாத்தனூர் அணையில் உள்ள 20 பழைய ஷட்டர்களை அப்புறப்படுத்தி விட்டு புதிய ஷட்டர்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் முழு கொள்ளளவான 119 அடிக்கு பதிலாக 99 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கன மழையின் காரணமாக 99 அடியும் நிரம்பியது. இதன் காரணமாக தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும் 9 கண் மதகு வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முதல் 50 ஆயிரத்து 945 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அந்த மதகுகளின் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இதனால் அணை முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. அணையின் தடுப்பு சுவரின் ஒரு பகுதி உடைந்தது. பூங்கா முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. முதன்முறையாக சாத்தனூர் அணையை தண்ணீர் சூழ்ந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தொடர்ந்து 24 மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழையால் செங்கம் அடுத்த திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான முல்லிக்குட்டை ஏரி உடைந்து நடவு செய்யப்பட்டிருந்த நெல்பயிருக்குல் வெள்ளம் புகுந்தது. இதனால் சுமார் 100 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அப்பகுதியில் வீட்டு மனை அமைத்துள்ள சில ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஏரியின் கோடியை மூடி சாலை அமைத்து ஆக்ரமிப்பு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் வெளியேற வழி இல்லாததால் ஏரி உடைந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே ஆக்கிரமிப்பை அகற்றி ஏறி கோடியை முறையாக அமைத்து தண்ணீர் வெளியேற செய்ய வேண்டும் என்றும், தண்ணீரில் மூழ்கிய நெற்பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிளையூர் ஸ்ரீ தாழை மடுவுகாளியம்மன் திருக்கோயில் அருகில் உள்ள மேம்பாலத்தின் மீது தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஊர்கவுண்டனூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 1304 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகப்பட்;சமாக திருவண்ணாமலையில் 150¸ வெம்பாக்கத்தில் 133.2¸ தண்டராம்பட்டில் 131¸ கீழ்பென்னாத்தூரில் 125¸ செங்கத்தில் 108.2¸ கலசப்பாக்கத்தில் 103.8 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மீன் வேட்டைக்கு தயார் |
திருவண்ணாமலையில் பெய்த தொடர் கன மழையின் காரணமாக திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரி¸ சேரியந்தல் ஏரி¸ கொம்பன் ஏரி¸ கீழ்நாத்தூர் ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர் ரோடுகளில் முழுங்கால் அளவு ஓடுவதால் அப்பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஏராளமான வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. திண்டிவனம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் புகுந்தது. இதே போல் வேட்டவலம் ரோடுக்கு செல்லும் ரிங்ரோட்டிலும் தண்ணீர் சென்றது.
இதே போல் பல பகுதிகளிலும் ஏரி தண்ணீர் கிராமங்களில் புகுந்துள்ளது. திருவண்ணாமலை அடுத்த இலுப்பந்தாங்கல் கிராமத்தில் சக்திவேல் என்பவரின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் அவரது மகன் தரனேஷ்(வயது 8) இடிபாடுகளில் சிக்கி பலியானான். சக்திவேலின் மாமனார் அண்ணாதுரை படுகாயம் அடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் குளங்கள் நிரம்பி நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி அடைந்தனர். சுமார் 1000 ஏக்கர் பயிர்கள் இந்த மழையினால் சேதமடைந்துள்ளன இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.