Homeசெய்திகள்திருவண்ணாமலை கோயிலில் உள்ளுர் மக்களுக்கு அநீதி

திருவண்ணாமலை கோயிலில் உள்ளுர் மக்களுக்கு அநீதி

திருவண்ணாமலை கோயிலில் உள்ளுர் மக்களுக்கு அநீதி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ளுர் மக்களை தரிசனத்திற்கு அனுமதிக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. 

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் நாளை(10-11-2021) கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கொரோனோவை காரணம் காட்டி சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டும் தீபத் திருவிழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி தீபத்திருவிழா நடைபெறும் 19ஆம் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் உள்ளூர், வெளியூர் என 13 ஆயிரம் பக்தர்களுக்கு 17¸18¸19 மற்றும் 20ஆம் தேதி என 4 நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் முன்பதிவு பெற்றவர்களுக்கு மட்டுமே சுவாமியை தரிசிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் நாளை நடைபெறும் கொடியேற்றத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும்¸ அதன் பிறகு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாட்டின் படி 7ஆம் தேதி முதல் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக தரிசனத்துக்கு சென்ற உள்ளுர் பக்தர்கள் பலர் அனுமதி சீட்டு இல்லாத காரணத்தால் தரிசனத்துக்கு மறுப்பு தெரிவித்து திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர். நேற்று வெளியூர் பக்தர்கள் அதிகம் வராத சூழலில் உள்ளுர் பக்தர்களை அனுமதிக்காதது கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை கோயிலில் உள்ளுர் மக்களுக்கு அநீதி

திருவண்ணாமலை கோயிலில் உள்ளுர் மக்களுக்கு அநீதி

இந்நிலையில் விசுவ இந்து பரிஷத்¸ ஆர்.எஸ்.எஸ்.¸இந்து முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை அமுதா திருமண மண்டபத்தில் இன்று(9-11-2021) மாலை நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அகில இந்திய விசுவ இந்து பரிஷத்தின் மாநில துணைத் தலைவர் சக்திவேல்¸ இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று முன்தினம் 13 ஆயிரம் பேர் தரிசனம் செய்து உள்ளனர். ஆனால் நேற்று 6 ஆயிரம் பேரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளித்துள்ளனர் உள்ளுர் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். கோயில் இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியவில்லை. சர்வர் பழுதாகி விட்டதாக இணையதளத்தில் அடிக்கடி தெரிவிக்கப்படுகிறது. இதற்கு காரணம் இந்த அனுமதி சீட்டுகள் 10¸000 வரை விற்கப்படுவதாக தெரிகிறது. முன் பதிவு செய்யப்படுவதை பதிவிறக்கம் செய்தால் அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் படத்துக்கு பதிலாக வேறு ஏதோ குறியீடு போட்ட படம் வருகிறது. 

திருவண்ணாமலை கோயிலில் உள்ளுர் மக்களுக்கு அநீதி

மாவட்ட நிர்வாகம் நடத்திய தீபத் திருவிழா ஆலோசனை கூட்டத்தில் உள்ளுர் மக்களை அழைத்து எந்தவித கருத்தையும் கேட்கவில்லை தொடர்ந்து உள்ளுர் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். விரதம் இருக்கும் பெண்கள் கார்த்திகை தீபத்தன்று கிரிவலம்¸ மாட வீதியை வலம் வந்து விரதத்தை முடிப்பார்கள். சென்ற ஆண்டு அதற்கெல்லாம் அனுமதி அளிக்கப்படவில்லை. போராடிதான் அனுமதி வாங்கப்பட்டது. இந்த வருடம் அந்த அவல நிலை இருக்கக்கூடாது. அதே போல் குழந்தை பேறு பெற்ற பெண்கள் கரும்பு தொட்டில் எடுத்துச் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். 

ஆந்திரா மாநில மக்கள் இக்கோயிலுக்கு அதிக அளவு வருவதால் பணத்திற்கு ஆசைப்பட்டு சில  ஊழியர்கள் கதவை திறந்து விடும் நிலை உள்ளது. உள்ளுர் மக்கள் சென்று வருவதற்கென ஏதாவது ஒரு கோபுரத்தின் வழியை ஒதுக்கித் தர வேண்டும். வீட்டில் பூஜை செய்வது என்றால் தலைவாசல்  கதவைத் திறந்து வைத்து தான் பூஜை செய்கிறோம். ஆனால் அண்ணாமலையார் கோயிலில் தலைவாசலான ராஜகோபுரத்தை மூடிவிட்டு ஆகம விதிகளுக்கு முரணாக பூஜைகளை நடத்துகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். 

வருவாய்த்துறை¸ காவல்துறை¸ இந்து சமய அறநிலைத்துறை ஆகிய மூன்று துறைகளுக்கு மட்டுமே நடைபெறும் விழாவாக கார்த்திகை தீபத்திருவிழா விளங்குகிறது. மக்கள் விழாவான கார்த்திகை தீபத்திருவிழா அதிகாரிகள் விழாவாக மாறி போய் விட்டது. வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத போது வெளியூர் அதிகாரிகளுக்கு இங்கு என்ன வேலை? போலீசுக்கு கோயிலுக்குள் என்ன வேலை? 

எனவே கோயில் நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்தும்¸ உள்ளுர் மக்கள் புறக்கணிக்கப்படுவதை  கண்டித்தும் வருகிற 11-ஆம் தேதி திருவண்ணாமலை ராஜகோபுரம் முன்பு இந்து அமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். 

இவ்வாறு அவர்கள் கூறினர்

அப்போது விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்¸ ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!