திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸
திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 157 பலதரப்பட்ட வாகனங்கள் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப் பிரிவு 14(4) ன் படி அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி வரும் 29.12.2021ந் தேதி காலை 10 மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.
பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள கொரேனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு மற்றும் அரசின் வழிகாட்டுதல்களின் முன்னெச்சரிக்கை நடைமுறைகளை பின்பற்றியும்¸ கட்டாயமாக முககவசம் அணிந்து வரவும். மேலும்¸ நுழைவு கட்டணமாக ரூ.100ம் முன்பணமாக ரூ.1¸000மும் செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
27.12.2021 மற்றும் 28.12.2021ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலத்தில் கலந்து கொள்ள ரசீது வழங்கப்படும். மேலும்¸ ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையையும்¸ ஏலத்தொகையுடன் 18சதவீதம் (GST) சரக்கு மற்றும் சேவை வரியும் சேர்த்து உடனே செலுத்த வேண்டும். மேலும் பதிவு எண்¸ இன்ஜின் எண்¸ சேசிஸ் எண் இல்லாத வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மறுபதிவு செய்ய இயலாது. ஏலம் எடுத்த வாகனத்திற்கு உண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும்.
ஏல ரசீது எந்த பெயரில் பெறப்படுகிறதோ அவரே ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் மற்றும் அவர் பெயரிலே வாகனத்திற்கு உண்டான உரிமை ரசீது வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரடியாகவோ¸ தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் அலுவலக தொலைபேசி எண்: 04175- 233920
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.