Homeசெய்திகள்திருவண்ணாமலை: பஸ்சை ஓட்டிச் சென்றார் பிச்சாண்டி

திருவண்ணாமலை: பஸ்சை ஓட்டிச் சென்றார் பிச்சாண்டி

திருவண்ணாமலை: பஸ்சை ஓட்டிச் சென்றார் பிச்சாண்டி

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 7 வழித்தடத்தில் பஸ்களை இயக்கி வைத்த கு.பிச்சாண்டி ஒரு ஊரில் டிரைவர் சீட்டில் அமர்ந்து பஸ்சை ஓட்டிச் சென்றார். 

அந்த சமயத்தில் வைப்பூரில் அரசு பஸ் நிற்காததை கண்டித்து மாணவர்கள் பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கடம்பை ஊராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக புதிய வழிதடம் தொடக்க விழா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவர் பூ.அய்யாகண்ணு தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்து கழக திருவண்ணாமலை மண்டல பொது மேலாளர் கே.தசரதன்¸ மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகிக்க¸ ஊராட்சி மன்ற தலைவர் பி.மாரிமுத்து¸ அனைவரையும் வரவேற்றார். 

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி¸ கடம்பையிலிருந்து திருவண்ணாமலைக்கு டி42 என்ற எண் கொண்ட அரசு பஸ்சினை கொடியசைத்தும்¸ ரிப்பன் கத்தரித்தும் துவக்கி வைத்தார். பிறகு டிரைவர் இருக்கையில் அமர்ந்து பஸ்சை சிறிது தூரம் ஓட்டிச் சென்றார். அவர் பஸ்சை ஓட்டிச் சென்றதை கிராம மக்கள் வியப்புடன் பார்த்தனர். சில நாட்களுக்கு முன்பு மணலூர்பேட்டையிலிருந்து புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு அந்த பஸ்சை ஓட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. 

திருவண்ணாமலை: பஸ்சை ஓட்டிச் சென்றார் பிச்சாண்டி

கடம்பையை அடுத்து காட்டுமலையனூர்¸ வேடநத்தம்¸ பெரிய ஓலைப்பாடி¸ நெய்வானத்தம்¸ வேட்டவலம் ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அரசு பேருந்தினை கு.பிச்சாண்டி இயக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆ.சம்பத்¸ வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன்¸ தொமுச மாநில பேரவை செயலாளர் சௌந்தர்ராஜன்¸ மண்டல தலைவர் துரைசாமி¸ வேட்டவலம் நகர செயலாளர் முருகையன்¸ கீழ்பென்னாத்தூர் அட்மா குழு தலைவர் ஆர்.சிவக்குமார்¸ ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.முத்து வடிவு முனியன்¸ ஒன்றிய துணை செயலாளர் இளம்பருதி¸ வேடநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் மா.குப்புசாமி உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள்¸ கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் பணிமனை மேலாளர் கோதண்டராமன் நன்றி கூறினார்.

வேட்டவலம் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு துணை சபாநாயகர் பிச்சாண்டி வைப்பூரில் நடைபெற்ற சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளை வழங்கினார். 

அவர் வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் வைப்பூரில் மாணவர்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இது பற்றிய விவரம் வருமாறு¸

வேட்டவலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து சுமார் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வேட்டவலம் அரசினர் மேல்நிலைப்பள்ளி¸ அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி¸ அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி¸ செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளுக்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருக்கோவிலூரில் இருந்து வேட்டவலம் செல்லும் அரசு பஸ்சில் வருகின்றனர். 

இந்த பஸ் வைப்பூர் கிராமத்தில் நிற்பதில்லை என சொல்லப்படுகிறது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால் டிரைவர் பஸ்சை நிறுத்தி மாணவர்களை ஏற்றி செல்வதில்லையாம். சில நேரங்களில் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தாமல் சில அடி தூரம் சென்று நிறுத்துவதால் மாணவர்கள் ஓடிச் சென்று முண்டியடித்துக் கொண்டு ஏறும் நிலை உள்ளது. இதனால் தவறி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

திருவண்ணாமலை: பஸ்சை ஓட்டிச் சென்றார் பிச்சாண்டி

திருவண்ணாமலை: பஸ்சை ஓட்டிச் சென்றார் பிச்சாண்டி

இன்றும்(8-12-2021) பஸ் நிற்காமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் திருக்கோவிலூரில் இருந்து வேட்டவலம் செல்லும் அரசு பஸ்சை சிறை பிடித்தனர். காலை 9 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் 10 மணி வரை தொடர்ந்தது. 

துணை சபாநாயகர் புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்கிய நேரத்திலும்¸ வைப்பூருக்கு அவர் வரும் நேரத்திலும் பஸ் வசதி கேட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து அதிகாரிகள் டென்ஷன் ஆனார்கள். உடனடியாக வேட்டவலம் காவல்துறையினரும்¸ அதிகாரிகளும்¸  சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பள்ளி செல்லும் நேரத்தில் கூடுதல் பஸ் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறிய உறுதிமொழியை ஏற்று மாணவர்கள் பஸ்சை விடுவித்தனர். 

மாணவர்கள் போராட்டத்தினால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

See also  100 அடி உயர கம்பத்தில் 12 கிலோ தேசியக் கொடி

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!