Homeசெய்திகள்6 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி

6 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி

6 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி

திருவண்ணாமலை அருகே பயிர்களை பாதுகாக்க 6 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.

தேசியப் பறவையான மயிலை வேட்டையாடுவதோ¸ துன்புறுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். மயிலை கொன்றால் ஜாமீனில் வர முடியாது. மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். திருவண்ணாமலை பகுதியில் மலை பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை மலையை ஒட்டிய நிலப்பகுதிகளில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன. திருவண்ணாமலை நகரில் செங்கம் ரோடு¸ ரமணா நகர்¸ தாமரை நகர் போன்ற பகுதிகளில் உணவை தேடி மயில்கள் கூட்டம்¸ கூட்டமாக சுற்றித்திரிவதை காணமுடிகிறது.

நிலத்தில் உள்ள பயிர்களை மயில்கள் சேதப்படுத்துவதை தடுத்திட சில விவசாயிகள்¸ பயிர்களில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து வைத்து மயில்களை கொல்வதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. இதே போன்று சம்பவம் திருவண்ணாமலை அருகே நடைபெற்றுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த கீரனூர் ராஜாபாளைத்தைச் சேர்ந்தவர் காசிராஜா(வயது 57). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் திருவண்ணாமலை வனச்சரகம்¸ திப்பக்காடு காட்டுப்பகுதியை ஒட்டி உள்ளது. தனது நிலத்தில் காசிராஜா நெல். சோளம் ஆகியவற்றை பயிரிட்டிருந்தார். இந்த பயிர்களை காட்டுப்பகுதியில் வசித்து வந்த மயில்கள் சேதப்படுத்தியதால் அவற்றை கட்டுப்படுத்த அவர் பயிர்களில் பூச்சிக் கொல்லி மருந்தை கலந்து வைத்தார். இதை தின்ற 1 ஆண் மயில்¸ 5 பெண் மயில் என மொத்தம் 6 மயில்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தன.

6 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி

இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வேலூர் வனப்பாதுகாவலர் சுஜாதா அறிவுரையின் பேரில் மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையில் வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மயில்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

See also  கேஸ் கம்பெனிகள் மீது அதிகாரியிடம் சராமாரி புகார்

இது சம்மந்தமாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து காசிராஜாவை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். இது போன்று மயில்களை கொல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!