Homeசெய்திகள்மருத்துவ படிப்பு:அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்று

மருத்துவ படிப்பு:அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்று

மருத்துவ படிப்பு:அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றை கலெக்டர் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பிற்கு தேர்ந்தோர் பட்டியலில் மாநில அளவில் திருவண்ணாமலை மாவட்டம் 5-வது இடத்தைப் பெற்றுள்ளது. நீட் தேர்வில் தேர்வாகி உள்ள 25 மாணவர்களில்  18 மாணவர்கள் M.B.B.S மற்றும் 7 மாணவர்கள் பல்மருத்துவ படிப்பிற்கும் (B.D.S) தேர்வாகி உள்ளனர். இம்மாணவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் மருத்துவ சீருடை¸ இதய துடிப்பு அறியும் கருவி (Stethoscope) மற்றும் கேடயம் ஆகியவற்றினை வழங்கி¸ மாணவ¸ மாணவிகளை வாழ்த்தி பாராட்டினார். 

அவர்கள் மத்தியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் நீட் தேர்வில் தேர்வாகியுள்ள மாணவர்களிடம் நம்முடைய முதல் கனவு மருத்துவராக வேண்டும் என்று தான் அனைவருக்கும் இருக்கும். நம்முடைய பெற்றோர்களும் மருத்துவராக வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அதற்கு பிறகு தான்¸ பொறியாளர்¸ கலை மற்றும் அறிவியல் என்ற படிப்பை நீங்கள் தேர்வு செய்வீர்கள். நீங்கள் அனைவரும் வருங்காலத்தில் சிறந்த மருத்துவராக வர வேண்டும் என்றும்¸ நீங்கள் இந்த அளவிற்கு வருவதற்கு காரணமாக இருந்த உங்களுடைய ஆசிரியர்கள் மற்றும்  பெற்றோர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டார்.  

மருத்துவ படிப்பு:அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்று

அனைத்து அரசு பள்ளிகளில் கணிதப் பாடத்தைப் பயிற்று விக்கும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தியதற்காக மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கேடயம் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா¸ மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.அருள்செல்வம்¸ மாவட்டக் கல்வி அலுவலர்கள் லூ.ஆரோக்கியசாமி (திருவண்ணாமலை) சு.தயாளன் (போளூர்;)¸ ஜி.அரவிந்தன் (செங்கம்;)¸ கோ.சந்தோஷ் (ஆரணி)¸ அ.நளினி (செய்யாறு) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மேல்நிலை நா.வெங்கட்ராமன்¸ பள்ளியின் ஆசிரியர்கள்¸ மற்றும் பெற்றோர்கள்; கலந்து கொண்டனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!