பச்சையப்பாஸ் சில்க்ஸ் நடத்திய கோலப் போட்டியில் பிரிட்ஜ்¸ டி.வி¸ வாஷிங் மெஷின் போன்ற பரிசுகளை பெண்கள் தட்டிச் சென்றனர்.
1926ம் ஆண்டு முதல் பட்டு¸ ஜவுளி விற்பனையில் காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனம் தனது 7வது புதிய கிளையை திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் துவக்கியுள்ளது. 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் திறக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை பச்சையப்பாஸ் சில்க்ஸ்சில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் திருப்திபடுத்தும் வகையில் தரமான ஆடைகள் நியாயமான விலையில் கிடைத்து வருவதால் மக்களின் பேராதரவு கிடைத்துள்ளது.
இந்நிறுவனத்தின் தலைவர் சுந்தர்கணேஷ்¸ நிர்வாக இயக்குநர் பச்சையப்பன் பிரபு¸ இயக்குநர்கள் எஸ்.வசந்தராஜ்¸ எஸ்.முருகேஷ்¸ பி.ஜெகன்ராஜ் ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில் மகளிர் தினத்தையொட்டி “கோலம் கோலாகலம்” என்ற பிரம்மாண்டமான கோலப் போட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இன்று காலை நடைபெற்றது.
இந்த கோலப் போட்டியில் கலந்து கொள்ள திருவண்ணாமலை நகரத்திலிருந்தும்¸ சுற்றுப்புற பகுதியிலிருந்தும் அதிகாலை முதலே பெண்கள் கிரிவலப்பாதையில் குவிந்தனர். காலை 7 மணிக்கு போட்டி தொடங்கியது. கிரிவலப்பாதை ஐஸ்வரேஸ்வரர் கோவில் அருகிலிருந்து திருநேர் அண்ணாமலை கோயில் வரை விதவிதமான கோலங்களை முன்பதிவு செய்திருந்த 580 பெண்கள் வரைந்து தள்ளினர். பெரும்பாலான பெண்கள் வரைந்திருந்த கோலங்களில் சாமி உருவங்கள் மற்றும் பெண்களை போற்றும் வாசகங்கள்¸ சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அடங்கிய வாசங்கள் இடம் பெற்றிருந்தன.
பச்சையப்பாஸ் சில்க்ஸ் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த நடுவர்கள் மூலம் கோலங்களுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது. இதில் முதல் பரிசாக 4 பேருக்கு பிரிட்ஜ்¸ 2வது பரிசாக 4 பேருக்கு எல்.இ.டி. டி.வி¸ 3வது பரிசாக 4 பேருக்கு வாஷிங் மெஷின் ஆகியவை வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசாக 200 பேர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள கிப்ட் வழங்கப்பட்டது.
முதல் பரிசான பிரிட்ஜ் பெற்றவர்கள்
1)ஆனந்த லஷ்மி 2)சரண்யா சரவணன் வடமாத்தாதி தெரு. 3)கஸ்தூரி சுப்புராயன்¸ அகிலா ஜவகர்¸ வேட்டவலம் ரோடு¸ திருவண்ணாமலை.
இரண்டாவது பரிசான எல்.இ.டி. டி.வி பெற்றவர்கள்
1)பவித்ரா பெருமாள்¸ அக்னிலிங்கம்¸ 2)ஷிபா கார்த்திகேயன்¸ வடவீதி¸ 3)சங்கீதா¸ வ.ஊ.சி நகர்¸ திருவண்ணாமலை. 4)தீபா புகழேந்தி¸ கிளியாப்பட்டு¸ திருவண்ணாமலை வட்டம்.
மூன்றாவது பரிசான வாஷிங் மெஷின் பெற்றவர்கள்
1)பார்வதி ராஜதுரை¸ வேட்வலம் ரோடு¸ 2)மகாலஷ்மி¸ வேங்கிக்கால் குறிஞ்சி நகர்¸ 3)வரலஷ்மி கோபு¸ வேங்கிக்கால் ஓம்சக்தி நகர்¸ திருவண்ணாமலை. 4) ஆனந்த பைரவி¸ அண்டம்பள்ளம்¸ திருவண்ணாமலை ஒன்றியம்.
கோலப் போட்டியை திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி துவக்கி வைத்தார். சிவா எலட்ரானிக்ஸ் உரிமையாளர் விமல்¸ தொழிலதிபர் செந்தில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பச்சையப்பாஸ் மேலாளர்கள் கந்தவேல்¸ மணிகண்டன்¸ விற்பனை பிரிவை சேர்ந்த வாசு மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகை அம்மு தொகுத்து வழங்கினார்.