Homeசெய்திகள்உக்ரைன் நாட்டினருக்கு உணவு-உடை தந்து உதவும் சமூக சேவகர்

உக்ரைன் நாட்டினருக்கு உணவு-உடை தந்து உதவும் சமூக சேவகர்

உக்ரைன் நாட்டினருக்கு உணவு-உடை தந்து உதவும் சமூக சேவகர்

திருவண்ணாமலையில் தவித்து வரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சமூக சேவகர் ஒருவர் உணவு-உடை தந்து உதவி செய்து வருகிறார். 

இதுபற்றிய விவரம் வருமாறு

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இன்று 15வது நாளாக நீடித்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அங்கு சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மத்திய அரசும்¸ மாநில அரசும் மீட்டு வருகிறது.

இந்நிலையில் உக்ரைனை சேர்ந்தவர்கள்¸போர் மூள்வதற்கு முன்பே சுற்றுலாவிற்காக இந்தியாவிற்கு வந்து பல்வேறு நகரங்களில் தங்கி இருக்கின்றனர். திருவண்ணாமலையிலும் வெளிநாட்டினர் நூற்றுக்கணக்கானோர் தங்கியிருக்கின்றனர். இதில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட உக்ரைன் நாட்டினர் தங்கி உள்ளனர்.  

உக்ரைனில் நடைபெற்றுவரும் போரால் அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் கொண்டு வந்த பணமும் செலவாகி விட்டதால் தங்க இடமின்றியும்¸ உணவு – உடையின்றியும் அவர்கள் அவதிப்பட்டு வந்தனர். 

திருவண்ணாமலை பெரும்பாக்கம் ரோட்டில் குளோபல் வாட்ச் டிரஸ்ட் எனும் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சமூக சேவகர் வி.எஸ்.சத்யன்¸ தனது அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற மாணவ-மாணவியர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை பயில தேவையான உதவிகளை செய்து வருகிறார். இதே போல் இதுவரை 500 பேருக்கு மேல் இலவச கனிணி பயிற்சி அளித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் 150 மாணவ-மாணவியர்களை கனிணி நிபுணர்களாக உருவாக்கி வருகிறார். 

உக்ரைன் நாட்டினருக்கு உணவு-உடை தந்து உதவும் சமூக சேவகர்

உக்ரைன் நாட்டினர் உணவின்றி தவித்து வருவதை கேள்விப்பட்டதும் வி.எஸ்.சத்யன் தனக்கு சொந்தமான சன் ஷைன் எனும் விடுதியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 22 பேருக்கு இலவசமாக உணவு மற்றும் உடை கொடுத்து  தங்க வைத்துள்ளார்.  6 நாட்களாக இங்கு தங்கி இருக்கும் இவர்களுக்கு திருவண்ணாமலை கோவிலுக்கு செல்லவும் கிரிவலம் செல்லவும் தேவையான வாகன வசதியும் இலவசமாக செய்து தந்துள்ளார்.

உக்ரைன் நாட்டினருக்கு உணவு-உடை தந்து உதவும் சமூக சேவகர்

உக்ரைன் நாட்டினருக்கு உணவு-உடை தந்து உதவும் சமூக சேவகர்

இதுபற்றி அவர் முகநூலில் பதிவிட்டுள்ளதை பார்த்து இந்தியாவில் வெளிமாநிலங்களில் உள்ள உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்களும் இங்கு வந்து தங்க ஆரம்பித்துள்ளனர். இதே போன்று பலரும் உணவுக்கு கஷ்டப்பட்டு வருவதால் தமிழக முதல்வர் யாத்திரிகா நிவாஸ் போன்ற அரசின் தங்கும் விடுதிகளில் அவர்களை தங்க வைத்து தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக சேவகர் சத்யன் கோரிக்கை விடுத்துள்ளார். 

உணவு¸ உடை கொடுத்து தங்க வைத்துள்ள தமிழரின் மனித நேயத்தை உக்ரைன் நாட்டினர் வெகுவாக  பாராட்டியுள்ளனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!