Homeசெய்திகள்கட்டப்பஞ்சாயத்துகாரர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்- எஸ்.பி

கட்டப்பஞ்சாயத்துகாரர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்- எஸ்.பி

கட்டப்பஞ்சாயத்துகாரர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்- எஸ்.பி

கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுபவர்கள் குறித்து உடனுக்குடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என எஸ்.பி கேட்டுக் கொண்டுள்ளார். 

சென்னையில் நடைபெற்ற கலெக்டர்கள்¸ போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் தொழில் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் ரவுடிகள் கொட்டத்தை அடக்கிட வேண்டும் என உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரவுடிகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கக் கூடாது என எச்சரிக்கையும் விடுத்தார். 

இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள தூசி காவல் நிலையத்தில் சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் அரசு அனுமதி பெற்ற குவாரி உரிமையாளர்களிடம் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் ரவுடிசம் கட்டப்பஞ்சாயத்தை ஒழிப்பது குறித்தும் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் படி குவாரிகளை நடத்த வேண்டும் என்றும்¸ போக்குவரத்தை ஒழுங்கு படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் கலந்துரையாடினார். 

அப்போது தூசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வந்தவாசியிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சிப்காட் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் குவாரி வாகனங்கள் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் செல்லக் கூடாது என்றும், லாரிகளில் அதிக பாரம் ஏற்றக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். 

கட்டப்பஞ்சாயத்துகாரர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்- எஸ்.பி

தொழிற்சாலைகளில் வேலை கொடுக்க வேண்டும் என்றும்¸ மாமுல் கொடுக்க வேண்டும் என்றும்¸ கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுபவர்கள் குறித்தும் உடனுக்குடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்¸ கல்குவாரியினர் தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

கூட்டம் முடிந்ததும் தூசி காவல் நிலையத்தில் மரக்கன்றுகளை அவர்  நட்டார். இந்நிகழ்ச்சிகளின் போது செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் வி.இ.செந்தில் உடனிருந்தார்.

See also  திருப்பதியில் ரூ.3000 டிக்கெட் வாங்குகிறீங்க-அமைச்சர் வேலு கடுப்பு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!